பர்லோ (ஐக்கிய அமெரிக்கா)

ஐக்கிய அமெரிக்காவில் தங்களது பொருளாதார நிலை அல்லது நாட்டின் பொருளாதார நிலை போன்ற சிறப்புக் காரணங்களுக்காக நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தற்காலிகமாக ஊதியமில்லா விடுப்புத் தருவது பர்லோ ( furlough /ˈfɜːrl/; டச்சு மொழியிலிருந்து: "verlof", leave of absence) என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய தானாக இயல்கின்ற விடுப்புக்கள் குறைந்த காலத்திற்கோ நெடுங்காலத்திற்கோ இருக்கலாம். இவ்வாறு பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தற்காலிகமாக வேறு வேலை தேடுவதும் உண்டு.

கூட்டரசு

தொகு

ஐக்கிய அமெரிக்காவில் கூட்டரசுப் பணியாளர்களுக்கான பர்லோக்கள் திடீரென்றும் உடனடியாகவும் நேர்வதுண்டு. பெப்ரவரி 2010இல் இவ்வாறான ஓர் நிகழ்வு ஏற்பட்டது. அந்த ஆண்டில் மேலவையின் ஒற்றை மறுப்பினால் நெருக்கடி நிதி முறைமைகள் பின்பற்ற வேண்டியதாயிற்று. இதனால் போக்குவரத்துத் துறையின் 2000 கூட்டரசுப் பணியாளர்கள் உடனடியாக மார்ச்சு 1, 2010 முதல் பர்லோவில் செல்ல வேண்டியதாயிற்று.[1] ஐக்கிய அமெரிக்காவின் நெடுங்கால மூடுதல் திசம்பர் 16, 1995 முதல் சனவரி 6, 1996 வரை நடந்தது. இந்தக் காலத்தில் இன்றியமையாது எனப்படாத சேவைகள் முடங்கின; தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்கா, நுழைவாணை மற்றும் கடவுச்சீட்டு செயல்பாடு, பூங்காக்கள், மற்றும் பிற சேவைகள் மூடப்பட்டன.

2011ஆம் ஆண்டிலும் வான்வழிப் போக்குவரத்து நிர்வாகத்திற்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றம் ஏற்காததால் சூலை 22, 2011 முதல் 4000 பணியாட்கள் பர்லோவில் செல்ல வேண்டியதாயிற்று.

இந்நிலை மீண்டும் அக்டோபர் 1, 2013 அன்று எழுந்துள்ளது.[2]

மேற்சான்றுகள்

தொகு
  1. abcnews, Sen. Bunning Single-handedly Causes 2,000 Federal Worker Furloughs, March 1, 2010
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2005-09-28. பார்க்கப்பட்ட நாள் 2005-09-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்லோ_(ஐக்கிய_அமெரிக்கா)&oldid=3561910" இலிருந்து மீள்விக்கப்பட்டது