பர்வீனா அஹங்கர்
பர்வீனா அஹங்கர் (Parveena Ahanger) ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிறந்தார். இவர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.
பர்வீனா அஹங்கர் | |
---|---|
பிறப்பு | சிறிநகர், காஷ்மீர், இந்தியா |
மற்ற பெயர்கள் | காஷ்மீரின் இரும்புப் பெண்மணி |
பணி | காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தின் நிறுவனர் (APDP) |
அறியப்படுவது | 2017 ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான ராஃப்டோ பரிசை பெற்றவர் |
வலைத்தளம் | |
http://www.apdpkashmir.com |
2017 ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான ராஃப்டோ பரிசை இவர் "கட்டாயமாக காணாமல் போதல்களுக்கு எதிரான போராட்டங்களுக்காக" வென்றார். மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியதற்காக வென்றார். [1] [2] 2019 ஆம் ஆண்டிற்கான உலகெங்கிலும் உள்ள 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க பிபிசி 100 பெண்களின் பட்டியலில் ஒருவராக இவர் பெயரிடப்பட்டார் [3]
பர்வீனாவை 'காஷ்மீரின் இரும்புப் பெண்மணி' என்று குறிப்பிடுகிறார்கள். காஷ்மீரிகளின் வலி மற்றும் துயரங்கள் குறித்து இந்திய ஊடகங்களின் வஞ்சக அணுகுமுறையின் காரணமாக இவரால் நிராகரிக்கப்பட்ட இந்திய ஊடக நிறுவனமான சிஎனென்-ஐபிஎன் ஆல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். [4]
காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கம்
தொகுபர்வீனா, 1994 ஆம் ஆண்டு "காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கம்" என்கிற அமைப்பை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதால் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை ஆதரிப்பதற்கும் அணிதிரட்டுவதற்கும், காஷ்மீரில் 8-10,000 தன்னிச்சையான காணாமல் போன வழக்குகளை விசாரிக்க இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் தொடங்கினார். [5] இந்த அமைப்பு தன்னிச்சையாக காணாமல் போனவர்களுக்கு எதிரான ஆசிய கூட்டமைப்பின் ஒரு பகுதியாகும். [6]
காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தின் இணை நிறுவனரும் தலைவருமான பர்வீனா அஹங்கர், பிலிப்பைன்ஸ் (2000), தாய்லாந்து (2003), இந்தோனேசியா (2005), சியாங் மாய் (2006), ஜெனிவா (2008), கம்போடியா (2009) மற்றும் லண்டன் (2014). [7] போன்ற நகரங்களில் இந்த அமைப்பின் காரணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் விரிவுரை
தொகுபர்வீனாஅஹங்கர் 2014 இல் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேசினார் [8] அவரது உரையிலிருந்து ஒரு மேற்கோள்: [9]
“ | தாயின் வலி யாருக்கும் புரிவதில்லை. நான் பாதிக்கப்பட்டவள், எங்களைப் போல் பலர் இருக்கிறார்கள். காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கம் எனது வலியிலிருந்தும் என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான தாய்மார்களின் வலியிலிருந்தும் உருவானது. | ” |
சான்றுகள்
தொகு- ↑ "Parveena Ahangar, Parvez Imroz Awarded Norway's Rafto Prize for Human Rights". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.
- ↑ "Parveena Ahangar & Parvez Imroz". The Rafto Foundation. Archived from the original on 2018-06-15. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.
- ↑ "BBC 100 Women 2019". BBC.
- ↑ "Mother's Day Special: Parveena Ahengar, Mouj of Kasheer". Archived from the original on 2021-03-03. பார்க்கப்பட்ட நாள் 2023-03-08.
- ↑ "Association of Parents of Disappeared Persons | Cultures of Resistance". culturesofresistance.org. பார்க்கப்பட்ட நாள் 2019-08-21.
- ↑ "Annual Report 2018" (PDF). Asian Federation Against Involuntary Disappearances. 2019-10-16. Archived from the original (PDF) on 2021-07-26. பார்க்கப்பட்ட நாள் 2021-12-26.
- ↑ "Remembering those in Kashmir who exist but are missing" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-21.
- ↑ "Parveena Ahnager speaking at University of Warwick, UK". Kashmir Life. 2018-04-26. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
- ↑ Zahoor, Zubair (2021-07-16). "Parveena Ahangar: The Iron Lady Of Kashmir". Counter Currents (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.