பர்ஹான்-உத்-தின் (இந்திய தேசிய ராணுவ அதிகாரி)

பர்ஹான்-உத்-தின் (Burhan-ud-Din) (1914-1996) இவர், பாக்கித்தானின் சித்ரால் பகுதியைச் சேர்ந்த இந்திய தேசிய இராணுவத்தின் மூத்த வீரராவார். இரண்டாம் உலகப் போரின்போது சுபாஷ் சந்திரபோஸின் கீழ் இந்திய தேசிய ராணுவத்தில் இவர் செய்த சேவையின் விளைவாக இவர் மிகவும் பிரபலமானார்.

பர்ஹான்-உத்-தின்
பிறப்பு1 சனவரி 1914
சித்ரால்
இறப்பு1996
படித்த கல்வி நிறுவனங்கள்இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரி
பணிஇந்திய தேசிய ராணுவத்தின் மூத்தவர் பாக்கித்தான் செனட்டர்

பின்னர் இர் 1947-1948 ஆம் ஆண்டு இந்திய-பாக்கித்தான் போரில் சிலாஸில் பாக்கித்தான் இராணுவத்துடன் சித்ரால் சாரணர்களுடன் பணியாற்றினார். [1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் பெசாவரிலுள்ள இஸ்லாமியா கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் இந்திய தேசிய இராணுவக் கல்லூரியில் பயின்றார்.

இராணுவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தேராதூனில் உள்ள இந்திய ராணுவ கழகத்துக்குச் சென்றார். இவர் சூலை 15, 1936 இல் சிறப்பு பட்டியலில் இரண்டாவது லெப்டினெண்டாக நியமிக்கப்பட்டார். ஆகத்து 20, 1936 முதல் சென்னையிலுள்ள 1 வது படைப்பிரிவில் இணைக்கப்பட்டார். [3] பின்னர் இவர் இந்திய இராணுவத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆகத்து 20, 1937 இல் 5 வது படைப்பிரிவு, 10 வது பலூச் ரெஜிமென்ட்டில் சேர்ந்தார். வடமேற்கு எல்லையில் பெசாவரில் நிறுத்தப்பட்டார். [4]

இரண்டாவது லெப்டினெண்டாக அவர் நியமிக்கப்பட்ட தேதி செப்டம்பர் 1, 1935 க்கு முந்தியது, மேலும் அவர் டிசம்பர் 1, 1937 இல் லெப்டினன்டாக பதவி உயர்வு பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Beg, Sofia. "Remembring Burhan ud Din". Chitral News இம் மூலத்தில் இருந்து 2018-08-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180813190835/http://www.chitralnews.com/LT140.htm. 
  2. "INA & Burhan-ud-Din of Chitral". Pakistan Defence. http://defence.pk/threads/ina-burhan-ud-din-of-chitral.417322/. 
  3. October 1937 Indian Army List
  4. July 1939 Indian Army List