பறக்கும் மீன்கள்

கடல் மீன் குடும்பம்
பறக்கும் மீன்கள் ( கோலா மீன்)
புதைப்படிவ காலம்:Miocene–Recent
செய்ல்பின் பறக்கும் மீன்கள்
Parexocoetus brachypterus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Beloniformes
குடும்பம்:
Exocoetidae
பேரினம்
  • Cheilopogon
  • Cypselurus
  • Danichthys
  • Exocoetus
  • Fodiator
  • Hirundichthys
  • Oxyporhamphus
  • Parexocoetus
  • Prognichthys

பறக்கும் மீன்கள் உலகம் முழுவதும் காணப்பட்டாலும் குறிப்பாக அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல்களின் சூடான வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் பகுதியில் வசிக்கின்றன.[1] இவை ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல் வடிவத்தில் இருக்கும். மேற்பரப்பை உடைக்கவும் நீருக்கடியில் வேகத்தை அதிகரிக்கவும், மேலும் அவற்றின் பெரிய, இறக்கைப் போன்ற இடுப்புத் துடுப்புகள் அவர்களுக்கு காற்றில் பறக்க உதவுகிறது.

பறக்கும் மீனினம் பல உண்டு. அவைகள் தங்களை இரையாக்கி கொள்ள வரும் மற்ற கடல் உயிரினங்களில் இருந்து தப்பிக்க, பறக்கும் திறன் பெற்றிருக்காலாம் என்று கருதப்படுகிறது. பிளாங்டன் உள்ளிட்ட மீன்கள் உணவுக்காக பறக்கும். பறக்கும் மீன் துடுப்புகள் எல்லாம் மேல் மடல்களைக் காட்டிலும் நீண்ட கீழ் மடல் கிளைவிட்ட வால்களில் இருக்கிறது. பல இனங்கள் இடுப்பு துடுப்புகள் பெரியதாக இருக்கும் இவை நான்கு இறகு பறக்கும் மீன் எனப்படும்.

ஒரு மணி நேரத்திற்கு 37 மைல் (60 கிலோமீட்டர்) பறக்கிறது. பறக்கும் மீன் நீரினுள் இருக்கையில் தன் இறக்கை போன்ற துடுப்பை, உடலோடு ஒட்டியவாறு சுருக்கி வைத்திருக்கும். வேகமாகச் செல்ல நினைக்கையில், நீரினுள் இருக்கும் போதே பறப்பதற்கு முன் ஓடுதளத்தில், ஓடும் விமானம் போல் வேகமெடுத்து, நீரின் மேற்பறப்பை நோக்கி நீந்தி வந்து, நீர்பரப்பை அடைந்ததும் தன் பக்கத்துடுப்புகளை முழுவதும் விரித்துத் துள்ளித் தாவும். பெரிய விசை நீருக்கடியில் பெறுவதன் மூலம் மேல்நோக்கி நான்கு இறகு பறக்கும் மீன் மேற்பரப்பை உடைக்கிறது சில நேரங்களில் 4 அடி (1.2 மீட்டர்) அதிகமான உயரங்களை அடைந்து 655 அடி (200 மீட்டர்) வரை, நீண்ட தூரம் காற்றில் பறக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "பறந்து செல்லும் மீன்!". கட்டுரை. தி இந்து. 14 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறக்கும்_மீன்கள்&oldid=3577737" இலிருந்து மீள்விக்கப்பட்டது