பறக்கை மதுசூதனப் பெருமாள் கோயில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்

பறக்கை மதுதுசூதனப் பெருமாள் திருக்கோயில் கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில், பறக்கை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் நாகர்கோவிலுக்கு தென்கிழக்கே சுமார் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மதுசூதனப் பெருமாள் கோயில் கொண்டு அருள்புரிகிறார். இந்த ஆலயத்தில் மூலவர் மதுசூதனர் 5 அடி உயரம் கொண்ட சிற்ப வேலைப்பாடுகளுடன், சங்கு, சக்கரங்கள் இருகரங்களில் ஏந்தி ஒரு கரம் அபயம் அளிக்க மற்றொரு கரம் தொடைமேல் சார்ந்திருக்க அருள்பாலிக்கிறார். திருவிதாங்கூர் வரலாற்றின்படி இந்த ஊர் கிழால்மங்கலம் பறவைக்கரசூர் என்று இருந்ததாகவும் பின்னாளில் பறக்கை என்று மருவியதாகவும் கூறப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1000 ஆண்டுகள் பழமையான பறக்கை மதுசூதன பெருமாள் கோயில்". www.dinakaran.com. Archived from the original on 2023-02-08. பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.