பறாளை விநாயகர் பள்ளு

பறாளை விநாயகர் பள்ளு ஈழத்தில் தோன்றிய பள்ளு இலக்கியங்களில் ஒன்று. கிபி 18-19 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த யாழ்ப்பாணத்து, நல்லூர் சின்னத்தம்பிப் புலவரால் ஆக்கப்பட்ட இந்நூல், இலங்கையின் வடபாலுள்ள பறாளை என்னும் இடத்திலுள்ள விநாயகப் பெருமானின் மேற் பாடப்பட்டது. பள்ளு, உழத்திப் பாட்டு என்றும் அழைக்கப்படுவது உண்டு. இது தமிழில் உள்ள 96 பிரபந்த இலக்கிய வகைகளுள் ஒன்று.

அமைப்புதொகு

பள்ளு இலக்கிய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்ட பறாளை விநாயகர் பள்ளு 130 பாடல்களால் ஆனது. பொதுவாகப் பள்ளு இலக்கியங்கள் காப்பு, கடவுள் வாழ்த்து என்பவற்றுடன் தொடங்கி பள்ளிகள் வரவு, பள்ளன் வரவு, அவர்கள் வரலாறு, நாட்டு வளப்பம் முதலிய பல உறுப்புக்களைக் கொண்டு அமையும் எனத் தமிழ் இலக்கண நூல்களிற் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ள உறுப்புக்கள் அனைத்துமே எல்லாப் பள்ளு நூல்களிலும் இருப்பதில்லை. எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்ப இந் நூலிலும் தேவையான உறுப்புக்கள் மட்டுமே உள்ளன.

பறாளை விநாயகர் பள்ளு நூலில் அமைந்துள்ள உறுப்புக்கள் பின்வருமாறு:

1) காப்புச் செய்யுள், 2) விநாயகர் துதி, 3) நடேசர் துதி, 4) சிவகாமியம்மை துதி, 5) பள்ளியர் தோற்றம், 6) பள்ளியர் வரலாறு கூறல், 7) பள்ளன் தோற்றம், 8) பள்ளியர் தத்தம் நாட்டு வளங் கூறல், 9) குலமுறை கிளத்தல், 10) குயில் கூவுதல், 11) மழை கேட்டல், 12) ஆற்றுவரத்து, 13) பண்ணைக்காரன் தோற்றம், 14) ஆண்டையை வணங்கல், 15) விதைவகை கேட்டல், 16) முறைப்பாடு, 17) பள்ளன் மூத்த பள்ளியை வேண்டல். 18) மூத்த பள்ளி ஆண்டையை வேண்டல், 19) பள்ளன் ஆண்டைக்குக் கணக்கொப்பித்தல், 21) தலைவன் பொருள்வயிற் பிரிந்துழி தலைவி வருத்தம் பாங்கி கூறல், 22) முகூர்த்தங் கேட்டல், 23) இரங்கல், 24) நற்றாயிரங்கல், 25) நாற்று நடவு, 26) அதன் விளைவு, 27) சுழிக்கரைப் புலம்பல், 28) தலைவன் பொருள்வயிற் பிரிவில் தலைவியிரங்கல், 29) தலைவியைப் புகழ்தல்

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறாளை_விநாயகர்_பள்ளு&oldid=3219970" இருந்து மீள்விக்கப்பட்டது