பலராம தாசன்

15 ஆம் நூற்றாண்டு ஒடியா கவிஞர்

பலராம தாசன் (Balarama Dasa)[1] (1474-1522) பலராம் தாஸ் என்றும் உச்சரிக்கப்படும் இவர் ஓர் ஒடியா கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இவர் பக்தி இலக்கியத்தின் காலத்தில் ஒடியா இலக்கியமான பஞ்சசகாவின் ஐந்து சிறந்த கவிஞர்களில் ஒருவராக இருந்தார். இவர் பஞ்ச சகாவின் மூத்தவராக இருந்தார்.[2] இவர் தண்டி இராமாயணம் என்றும் அழைக்கப்படும் ஜகமோகன இராமாயணத்தை எழுதினார்.

பலராம தாசன்

தொழில் கவிஞர், துறவி
இலக்கிய வகை புராணம், மெய்யியல், யோகா
ஒடிய இசை
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
ஜகமோகன இராமாயணம், இலட்சுமி புராணம்

சொந்த வாழ்க்கைதொகு

இவரது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. இவரது தந்தை சோமநாத் மொகாபத்ரா, ஒடிசாவின் மூன்றாவது கஜபதி பேரரசர் பிரதாபருத்ர தேவனின் அரசவையில் பணிபுரிந்தார்.[3] ஓர் கல்வியாளரான இவர் சமசுகிருதத்தை நன்கு அறிந்திருந்தார். இவர் ஜெகன்நாதரின் பக்தரானார். இவரது நடுத்தர வயதில் சைதன்யருடன் தொடர்பிலிருந்தார். மேலும் அவரால் வைணவ சமயத்தில் சேர்ந்தார் என்று கூறப்படுகிறது.[4] புரிக்கு யாத்திரை சென்றபோது கோனார்க் அருகே உள்ள அமிண்டியா கிராமத்தில் இவர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த கிராமத்திற்கு அருகில் இவருக்கு ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.[5]

இலக்கியப் படைப்புகள்தொகு

 
கவிஞர் வழிபட்ட ஜெகன்னாதரின் மூலவர், எரபங்கா, ஒடிசா

தாச ராமாயணத்தை ஒடியாவுக்கு மொழிபெயர்த்தார். இது ஜகமோகன ராமாயணம் அல்லது தண்டி ராமாயணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மொழிபெயர்ப்பாக இருந்தாலும், பலவற்றில் அசலிலிருந்து மாறுபடுகிறது. சில பகுதிகளில் இவர் அசல் உரைக்கு எதிராக செல்கிறார். மேலும் சில பகுதிகளில் அசல் உரையை நெருக்கமாக பின்பற்றுகிறார். இன்னும் சில பகுதிகளில் இவர் முற்றிலும் புதிய கதைகளை உருவாக்குகிறார்.[6] [7]

இவர் பகபத் கீதையை ஒடியாவில் மொழிபெயர்த்ததன் மூலம் புதிய அடிப்படைகளை உடைத்தார். இதற்கு முன் மெய்யியல், இறையியல் நூல்கள் ஒடியாவில் மொழிபெயர்க்கப்படவில்லை. சரளா தாசரின் ஒடிய மகாபாரதத்தில் கூட, பகவத்கீதையை உள்ளடக்கிய பகுதி ஆசிரியரால் தவிர்க்கப்பட்டது. பலராம தாசர் பகவத்கீதையின் மொழிபெயர்ப்பிற்காக அர்ச்சகர்களால் துன்புறுத்தப்பட்டார்.[6]

மேற்கோள்கள்தொகு

  1. Satpathy, Sumanyu; Nayak, Jatindra K. (2015). ""Mad" Balarama Dasa and His "Rāmāyana"". Indian Literature 59 (3 (287)): 10–12. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5804. https://www.jstor.org/stable/44478655. 
  2. ""Panchasakha"-Sri Balaram Das". ReportOdisha.com. 2015-10-28. 2019-08-27 அன்று பார்க்கப்பட்டது.
  3. Patnaik, H.S.; Parida, A.N. (1996). Aspects of socio-cultural life in early and medieval Orissa. DSA Programme, Post Graduate Dept. of History, Utkal University. https://books.google.com/books?id=2jluAAAAMAAJ. பார்த்த நாள்: 2019-08-27. 
  4. Dalal, R. (2014). Hinduism: An Alphabetical Guide. Penguin Books Limited. https://books.google.com/books?id=zrk0AwAAQBAJ&pg=PT260. பார்த்த நாள்: 2019-08-27. 
  5. Dalal, R. (2014). Hinduism: An Alphabetical Guide. Penguin Books Limited. https://books.google.com/books?id=zrk0AwAAQBAJ&pg=PT261. பார்த்த நாள்: 2019-08-27. 
  6. 6.0 6.1 St-Pierre, P.; Kar, P.C. (2007). In Translation: Reflections, Refractions, Transformations. Benjamins translation library. John Benjamins Pub.. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-272-1679-3. https://books.google.com/books?id=S37EdUramu0C&pg=PA171. பார்த்த நாள்: 2019-08-27. 
  7. Paniker, K.A.; Sahitya Akademi (1997). Medieval Indian Literature: Surveys and selections. Sahitya Akademi. https://books.google.com/books?id=KYLpvaKJIMEC&pg=PA401. பார்த்த நாள்: 2019-08-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலராம_தாசன்&oldid=3210390" இருந்து மீள்விக்கப்பட்டது