பலேடியம்(II,IV) புளோரைடு


பலேடியம்(II,IV) புளோரைடு (Palladium(II,IV) fluoride) என்பது PdF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். பலேடியமும் புளோரினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் பலேடியம் டிரைபுளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஆனால் இது பலேடியம்(II) எக்சாபுளோரோ பல்லேடேட்டு(IV) என்ற கலப்பு இணைதிறன் சேர்மமாக விவரிக்கப்படுவது சிறப்பாகும். பெரும்பாலும் இதை Pd[PdF6] அல்லது Pd2F6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் எழுதுவார்கள்[1][2] .

பலேடியம்(II,IV) புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பலேடியம்(II) எக்சாபுளோரோபலேடேட்டு(IV)
இனங்காட்டிகள்
12021-58-8 Y
பண்புகள்
F3Pd
வாய்ப்பாட்டு எடை 163.42 g·mol−1
தோற்றம் கருப்பு திண்மம்
+1760.0·10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய் சதுரம்
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் நிக்கல்(III) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

பலேடியம் உலோகத்துடன் புளோரின் வாயுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அதிக நிலைப்புத்தன்மை கொண்ட Pd[PdF6] உருவாகிறது[1]

2Pd + 3F2 → Pd[PdF6]

Pd[PdF6] பாரா காந்தத் தன்மையுடன் காணப்படுகிறது. Pd(II) மற்றும் Pd(IV) இரண்டும் படிகக் கட்டமைப்பின் என்முகத் தளங்களை ஆக்கிரமிக்கின்றன[2][3]. கட்டமைப்பில் காணப்படும் PdII-F பிணைப்பு இடைவெளி 2.17 Å ஆகும். மற்றும் PdIV-F பிணைப்பு இடைவெளி 1.90 Å.ஆகும்[4]

 

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1152–1153. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. 2.0 2.1 Housecroft, C. E.; Sharpe, A. G. (2008). Inorganic Chemistry (3rd ed.). Prentice Hall. p. 788. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0131755536.
  3. Hepworth, M. A.; Jack, K. H.; Peacock, R. D.; Westland, G. J. (1957). "The crystal structures of the trifluorides of iron, cobalt, ruthenium, rhodium, palladium and iridium". Acta Crystallogr. 10: 63–69. doi:10.1107/S0365110X57000158. 
  4. Tressaud, A.; Neil Bartlett (chemist) (2001). "Preparation, Magnetic Properties, and Pressure-Induced Transitions of Some MIIMIVF6 (MII=Ni, Pd, Cu; MIV=Pd, Pt, Sn) Complex Fluorides". J. Solid State Chem. 162: 333–340. doi:10.1006/jssc.2001.9331. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலேடியம்(II,IV)_புளோரைடு&oldid=2688124" இலிருந்து மீள்விக்கப்பட்டது