பலோலி முஹமத் குட்டி
பலோலி முஹமத் குட்டி (Paloli Mohammed Kutty) (பிறப்பு நவம்பர் 11, 1931) கேரளா அரசின் முன்னாள் அமைச்சராகப் பணியாற்றிய ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய, மாநில உறுப்பினராக இருந்துள்ளார். இவர் கேரளா சட்டப் பேரவைக்கு 2006-2011 ஆம் ஆண்டில் மலப்புறம் மாவட்டம் பொன்னானி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
பலோலி முஹமத் குட்டி | |
---|---|
![]() | |
உள்துறை அமைச்சகம் | |
முன்னையவர் | குட்டி அகமது குட்டி |
தொகுதி | பொன்னானி சட்டமன்றத் தொகுதி, மலப்புறம் மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 நவம்பர் 1931 கோடூர் ,கேரளா, இந்தியா |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | கதீஜா |
பிள்ளைகள் | இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் |
பணி
தொகுகேரளாவின் மலப்புறம் அருகே கோடூர் என்ற இடத்தில் பலோலி முஹமத் குட்டி நவம்பர் 11 இல் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளிப் படிப்பு முடித்த பிறகு 1951 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினரானார். பல முறை இவர் அக்கட்சியின் மாவட்டக் குழுவில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு சிறப்பாகச் செயற்பட்டார். இவர் கட்சியின் விவசாயிகளின் பிரிவான கேரள கர்ஷாகா சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும், தலைவராகவும் பணியாற்றினார். 1964 ஆம் ஆண்டில் புழக்கட்டிரி பேரூராட்சியின் தலைவரகவும் 1987-91 ஆண்டுகளில் கேரள மாநில நிதி நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார். மலபார் பகுதியில் "நூலக இயக்கத்தின்" முன்னோடியாக இருந்த இவர், கோழிக்கோட்டில் உள்ள தேசாபிமானி அச்சு மற்றும் வெளியீட்டு நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். கேரளாவில் பல பொதுவுடைமை இயக்கத்தின் சக ஊழியர்களைப் போலவே, அவசர காலத்தில் 16 மாதங்களாக பலோலி ஒரு மறைமுக வாழ்வை வாழ்ந்தார்.[3]
1965 ஆம் ஆண்டு மங்கடா தொகுதியிலிருந்து முகமது குட்டியின் முதற் தேர்தல் வெற்றி வந்தது. பின்னர் 1967 ஆம் ஆண்டு மூன்றாவது கேரள சட்ட பேரவைக்கு பெரிந்தல்மண்ணை சட்டமன்ற தொகுதியில் இருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 1996 ஆம் ஆண்டு பொன்னானி தொகுதியிலிருந்து 10 வது சட்டப்பேரவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எ. கி. நாயனார் மற்றும் வி. எஸ். அச்சுதானந்தன் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக முறையே 1996-2001, 2006-2011 ஆகிய ஆண்டுகளில் பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Council of Ministers - Kerala". கேரள சட்டமன்றம். Retrieved 14 January 2010.
- ↑ "Members of Legislative Assempbly". கேரள அரசு. Archived from the original on 30 January 2010. Retrieved 14 January 2010.
- ↑ "Paloli Mohammed Kutty". Government of Kerala. Archived from the original on 31 December 2009. Retrieved 14 January 2010.