பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திண்டிவனம்
திண்டிவனம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி (University College of Engineering Tindivanam) என்பது சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகும். இது 2008 இல் நிறுவப்பட்டது. [1] இக்கல்லூரிக்கான புதிய கட்டிட வளாகத்தை கட்டுவதற்காக சுமார் 200 கோடியை கல்யாண சுந்தரம் நன்கொடையாக அளித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு கல்லூரியான திண்டிவனம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியானது 01- செப்டம்பர்- 2008 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சரான மு. கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. திண்டிவனம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் (யு.சி.இ.டி) பொறியியல் மாணவர்களுக்கான முதல் ஆண்டு வகுப்புகள் 8. செப்டம்பர், 2008 அன்று தமிழகத்தின் அப்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி முன்னிலையில் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி வளாகத்திற்கான சிறப்பு அதிகாரியான டாக்டர் ஆர். ராஜு, கல்லூரியை நிறுவுவதற்கான பொறுப்புகளையும், கல்லூரியின் வளர்ச்சியை மேற்பார்வையிடவும் பொறுப்பேற்றார்.
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Progress through Knowledge |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 15 செப்டம்பர் 2008 |
சார்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
துறைத்தலைவர் | முனைவர் டி. டேனியல் தங்கராஜ், |
அமைவிடம் | , , 12°15′45″N 79°39′25″E / 12.2625577°N 79.6568653°E |
இணையதளம் | www |
துறைகள்
தொகுஇக்கல்லூரியானது நான்கு துறைகளுடன் தொடங்கப்பட்டது. அவை:
(i) குடிசார் பொறியியல் துறை,
(ii) கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை,
(iii) மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் துறை,
(iv) தகவல் தொழில்நுட்பத் துறை.
குடிசார் பொறியியல் துறை
தொகுகுடிசார் பொறியியல் துறையானது மிகச் சிறந்த வசதிகளைக் கொண்டுள்ளது. இத்துறையில் பட்டம் பெற்ற மாணவர்கள் மாநில பொதுப்பணித் துறை போன்ற பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுகின்றனர். சில மாணவர்கள் பிஎச்.டி. மற்றும் எம்.டெக். பட்டப் படிப்புகளை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிஸ், கிண்டி பொறியியல் கல்லூரி - அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு கல்லூரிகளில் மேற்கொள்கின்றனர். இந்த தகவல்கள் அனைத்தும் இதன் முன்னாள் மாணவர் இணையதளத்தில் ( www
மேலும் காண்க
தொகு- ↑ "Official information about University college of engineering,Tindivanam Campus". Anna University. Archived from the original on 2011-10-31. பார்க்கப்பட்ட நாள் 2019-10-03.