பல்படிகத் திண்மம்
ஒரு திண்மத்தின் சிறுசிறு பகுதிகள் மட்டும் குறும்படிகங்களாய் இருந்து, இக்குறுபடிகங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று வெவ்வேறான கோணங்களில் இணைந்திருந்தால் அவ்வகை திண்மத்தை பல்படிகத் திண்மம் (polycrystalline, multicrystalline materials, அல்லது polycrystals) என்பர். இதிலும் குறும்படிகத்தின் பரும அளவைப்பொருத்து, மில்லி மீட்டர் அளவுப் பல்குறும்படிகம், மைக்ரோ மீட்டர் அளவுப் பல்குறும்படிகம், நானோ மீட்டர் அளவுப் பல்குறும்படிகம் என்று குறிக்கப்படும். குறும்படிகத்தின் பரும அளவைப்பொருத்து அத்திண்மத்தின் இயல்பியல் பண்புகள் பெருமளவு மாறுபடும். எடுத்துக்காட்டாக, மின் கடத்துமை பல்லாயிரம் மடங்கு வேறுபடும். அதே போல திண்மத்தின் காந்தப் பண்புகள், ஒளிப்பண்புகள், வேதியியல் பண்புகள் எல்லாம் மிக மிக மாறுபடும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bacillite | geology". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-06.
- ↑ Manutchehr-Danai, Mohsen (2013-03-09). Dictionary of Gems and Gemology (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-04288-5.
- ↑ Petit, J.R.; Souchez, R.; Barkov, N.I.; Lipenkov, V.Ya.; Raynaud, D.; Stievenard, M.; Vassiliev, N.I.; Verbeke, V. et al. (10 December 1999). "More Than 200 Meters of Lake Ice Above Subglacial Lake Vostok, Antarctica". Science 286 (5447): 2138–2141. doi:10.1126/science.286.5447.2138. பப்மெட்:10591641.