பல்லவி அனுபல்லவி

பல்லவி அனுபல்லவி (1983) பிரபல இயக்குனரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த கன்னட மொழி திரைப்படமாகும். மணிரத்தினம் இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தில் பிரபல இந்தி திரைப்பட கதாநாயகன் அனில் கபூர் கதாநாயகனாகவும், நடிகை லட்சுமி கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா ஆவார். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் சிறந்த திரைக்கதைக்காக மணிரத்தினம் கர்நாடக அரசின் மாநில விருதைப் பெற்றார்.

இப்படம் தமிழில் பிரியா ஒ பிரியா என்று மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவி_அனுபல்லவி&oldid=2706111" இருந்து மீள்விக்கப்பட்டது