பல்லவி அய்யர்
பல்லவி அய்யர் ஒரு இந்தியப் பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் ஆவார். தில்லியில் வளர்ந்த இவர் தில்லியிலும் லண்டனிலும் தன் பட்டப்படிப்பை முடித்தார். சீனாவில் இவர் ஏறத்தாழ 5 ஆண்டு காலம் வசித்திருக்கிறார். தனது அனுபவங்களை சுமோக் அண்ட் மிரர்சு: சீனாவில் ஒர் அனுபவம் (Smoke and Mirrors: An Experience of China) என்ற ஆங்கில நூலாக எழுதியுள்ளார். இதனை சீனா - விலகும் திரை என்ற பெயரில் தமிழில் ராமன் ராஜா மொழி பெயர்த்துள்ளார். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சீனாவைப் பற்றிய பல்வேறு தகவல்களை இந்த நூல் தமிழில் தருகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "About Swami". Swaminomics (web site of Swaminathan Aiyar). 27 January 2010.
- ↑ "Gitanjali Aiyar's Cause of Death: Award-Winning Doordarshan Anchor dies at 71". Janbharat Times. 8 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
- ↑ Khadpekar, Nirmala (29 July 2020). "The Name as Family - Forever and Ever". LinkedIn Pulse. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.