பல்லாவரம் ஏரி

ஒரு சென்னை ஏரி

பல்லாவரம் ஏரி அல்லது பெரிய ஏரி (Pallavaram lake) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு ஏரியாகும். இந்த ஏரி பல்லாவரம்-குரோம்பேட்டை தொடர்வண்டி பாதையின் கிழக்குப்பக்கத்தில் உள்ளது. இது ஒரு பெரிய ஏரியாக இருந்தும் வறண்டும், தொழிற்சாலை கழிவு நீராலும், குப்பைகளாலும் மாசடைந்துள்ளது.

பல்லாவரம் ஏரி
பெரிய ஏரி
அமைவிடம்தமிழ்நாடு, சென்னை
ஆள்கூறுகள்12°57′30.73″N 80°9′5.7″E / 12.9585361°N 80.151583°E / 12.9585361; 80.151583
குடியேற்றங்கள்சென்னை

இங்கு ஒரு இடுகாடும் உள்ளது இங்கு பிணங்களை புதைத்துவருகின்றனர்.

சூழலியல் தாக்கம்

தொகு

இந்த ஏரி தொடர்வண்டிகளில் செல்பவர்களுக்கு நன்கு தெரியும் வகையில் உள்ளது.[1] இந்த ஏரியில் ஒரு துளி நீரும் இல்லை.[2] மேலும் குப்பைகள் குவிந்து மாசடைந்த நிலையில் உள்ளது.[3]

ஏரியின் சுகாதாரத்தின் நிலை பின்வறுமாறு

  • ஏரியின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள தோல் நிறுவனங்களில் இருந்து கழிவு நீர், ஏரியில் தசாப்தங்களாக கலந்துவருகிறது. மேலும் இப்பகுதியில் நடந்துவரும் பெரிய அத்துமீறல் என்றால் சட்டவிரோத கட்டிடங்கள் மற்றும் நிர்மாணங்களால் ஏரியின் பரப்பு சுருங்கி வருகிறது.
  • ஏரியின் கிழக்குப் பக்கத்தில், ஏரியின் நீர்தேங்குப் பகுதியில் 2001 இல் சாலை கட்டுமானத்துக்காக ஏரியின் மதகுகள் இடிக்கப்பட்டன.
  • ஏரியின் நடுவில் குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகியவற்றை துரைப்பாக்கத்துடன் இணைக்கும் ஆர சாலையை அமைத்து ஏரி இரண்டாக துண்டிக்கப்பட்டது.[4]
  • ஏரியின் தென்மேற்குப் பகுதியில் ஏரியின் உள்ளே ஒரு பெரிய அத்துமீறலாக மதில் சுவர்கள் அமைத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Encroachments shrinking Pallavaram Lake". The Hindu. 18 April 2005 இம் மூலத்தில் இருந்து 20 ஏப்ரல் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050420162531/http://www.hindu.com/2005/04/18/stories/2005041810940400.htm. பார்த்த நாள்: 4 January 2012. 
  2. "HC all set to save Chennai lakes". CNN IBN. 19 June 2007 இம் மூலத்தில் இருந்து 3 ஜூலை 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090703113644/http://ibnlive.in.com/news/hc-all-set-to-save-chennai-lakes/37253-3.html. பார்த்த நாள்: 4 January 2012. 
  3. "Waterbodies are currently the dumpyards in suburbs". Times of India. 19 June 2007 இம் மூலத்தில் இருந்து 17 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120717005732/http://articles.timesofindia.indiatimes.com/2010-02-01/chennai/28147399_1_solid-waste-management-panchayats-local-bodies. பார்த்த நாள்: 1 February 2010. 
  4. "Construction of culverts begins across Pallavaram-Thoraipakkam Radial Road". The Hindu. 8 September 2008 இம் மூலத்தில் இருந்து 11 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080911011223/http://www.hindu.com/2008/09/08/stories/2008090855750600.htm. பார்த்த நாள்: 4 January 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லாவரம்_ஏரி&oldid=3613288" இலிருந்து மீள்விக்கப்பட்டது