பளிங்கு ஊதுபைத் தவளை
பளிங்கு ஊதுபைத் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | அப்பர்தான்
|
இனம்: | அ. சிசுடோமா
|
இருசொற் பெயரீடு | |
அப்பர்தான் சிசுடோமா சினெய்டர், 1799 | |
வேறு பெயர்கள் | |
|
அப்பர்தான் சிசுடோமா (Uperodon systoma) என்பது பாக்கித்தான், இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படும் கூர்வாய் கொண்ட தவளை சிற்றினமாகும். இது பல்வேறு பொதுவான பெயர்களில் அறியப்படுகிறது: வெளிறிய தவளை, பளிங்கு ஊதுபைத் தவளை மற்றும் சின்ன ஊதுபைத் தவளை.[2]
விளக்கம்
தொகுஇதனுடையப் பொதுவான பெயர்கள் குறிப்பிடுவது போல, அப்பர்தான் சிசுடோமா ஒப்பீட்டளவில் சிறிய தலையுடன் மிகவும் திடமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இவை 64 mm (2.5 அங்) நீளம் (மூக்கு-குதம் நீளத்தில்) வரை வளரும்.[3]
இத்தவளைக்குப் பற்கள் இல்லை. இந்த அசாதாரண பண்பானது இதனுடைய உருமாற்றத்திற்குப் பிறகு இது உண்ணக்கூடிய உணவின் அடிப்படையில் அமைந்துள்ளது. இத்தவளை முக்கியமாகக் கறையான்கள் மற்றும் எறும்புகளுடன் மற்ற பூச்சிகளைக் குறைந்த எண்ணிக்கையில் உண்ணுகின்றது. இது போன்ற சிறிய ஆனால் இடஞ்சார்ந்த இரை பொருட்களைக் கைப்பற்றுவதில் பற்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்காது என்பதால் இந்த மாற்றம் இருக்கலாம். இரையை இவை, இவற்றின் நாக்கைப் பயன்படுத்திச் சேகரிக்கின்றன.[4]
வாழ்விடம் மற்றும் நடத்தை
தொகுஅப்பர்தான் சிசுடோமா என்பது மண்ணில் தன்னை புதைத்துக்கொண்டு வளைவாழ்க்கை வாழும் சிற்றினமாகும். இந்த தவளைகள் வறண்ட காடுகள், சமவெளிகள், தோட்டங்கள் மற்றும் விவசாய பகுதிகள் போன்ற பல வாழ்விடங்களில் காணப்படுகின்றன. முதிர்ச்சியடைந்த தவளைகள் மழைக்காலங்களில் மட்டுமே காணப்படும். மற்ற நேரங்களில் இவை மண்ணுக்குள் புதைந்து காணப்படும்.[1] மழைக்காலத்தில் கறையான்கள் கூட்டமாக வெளிப்படும் போது மழை பெய்யும் இரவுகளில் அதிகமாக உணவைப் பெறுகின்றன.[5]
பருவ மழையின் போது ஓடைகள் மற்றும் நெல் வயல்களின் கரைகளிலிருந்து ஆண் தவளை பெண் தவளைகளை ஓசை எழுப்பி கலவி மேற்கொள்கிறது. தண்ணீரில் மிதக்கும் முட்டைகளை இடுகின்றன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Das, I.; Dutta, S.; Manamendra-Arachchi, K.; de Silva, A.; Sharif Khan, M. (2009). "Uperodon systoma". IUCN Red List of Threatened Species 2009: e.T58023A11718129. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58023A11718129.en. https://www.iucnredlist.org/species/58023/11718129.
- ↑ Frost, Darrel R. (2013). "Uperodon systoma (Schneider, 1799)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 16 January 2014.
- ↑ Boulenger, G. A. (1890). Fauna of British India, including Ceylon and Burma. Vol. Reptilia and Batrachia. London: Taylor and Francis. p. 496.
- ↑ Das, I.; Coe, M. (1994). "Dental morphology and diet in anuran amphibians from south India". Journal of Zoology 233 (3): 417–427. doi:10.1111/j.1469-7998.1994.tb05274.x. http://ir.unimas.my/id/eprint/24020/1/70-%20Das%20%26%20Coe%20%28Frog%20dental%20morphology%29.pdf.
- ↑ Das, I. (1996). "Resource use and foraging tactics in a south Indian amphibian community". Journal of South Asian Natural History 2 (1): 1–30. http://www.wht.lk/zeylanica/volume-2-number-1/Das%20I.%20Resource%20use%20and%20foraging%20tactics%20in%20a%20south%20Indian%20amphibian.pdf. பார்த்த நாள்: 2022-09-10.