பழையன் (பாண்டிய சிற்றரசன்)

பழையன் என்பவன் மோகூர் மன்னன் என்றும், வேம்பு இவனது காவல்மரம் என்றும் கூறப்படுவதால் இவன் பாண்டியர் குடிச் சிற்றரசன் எனலாம். செங்குட்டுவன் இவனது காவல்மரத்தை வெட்டி இவனை ஒடுக்கினான். நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை 10 சேணன்ஆயினும், 'கேள்' என மொழிந்து, புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு, அரண்கள் தாவுறீஇ, அணங்கு நிகழ்ந்தன்ன மோகூர் மன்னன் முரசம் கொண்டு, நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து, 15 முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி, ஒழுகை உய்த்தோய்! (பதிற்றுப்பத்து 44)

இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ, அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து, பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும், வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும், வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென் (பதிற்றுப்பத்து, பதிகம் 5) [1]. [2] இவனது தம்பி இளம் பழையன் மாறன். இவர்களின் தலைநகர் மோகூர்.

அடிக்குறிப்பு

தொகு
  1. பதிற்றுப்பத்து 44, 5-ம் பத்தின் பதிகம்
  2. அகநானூறு-346