பழையபள்ளி பள்ளிவாசல், சங்கனாச்சேரி

பழையபள்ளி பள்ளிவாசல் (Pazhayapalli Mosque) என்பது இந்தியாவின், கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய பள்ளிவாசல் ஆகும். இது கோட்டயத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த பள்ளிவாசலானது 950 ஆண்டுகள் பழமையானது எனப்படுகிறது. இந்த பள்ளிவாசலானது நடு திருவாங்கூரில் பிரபலமான பள்ளிவசலாகும். இதன் ஆண்டுத் திருவிழாவான தங்கள் ஆதியந்திரம் அனைவராலும் போற்றப்படும் ஒன்று என்பதுடன், வெகு சிறப்பான சமூக விருந்துடன் புகழ்பெற்றது. இறையன்பர்களால் வழங்கப்படும் இரண்டு டன் அரிசியுடன், அதற்கு தேவையான அளவு கறியும் சேர்த்து சிறப்பான புலவு தயாரித்து அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இங்கு நடக்கும் சந்தணக்குடம் திருவிழாவானது செங்கணச்சேரிக்கு ஏராளமானவர்களை ஈர்க்கிறது.[1]

குறிப்புகள் தொகு

  1. https://www.keralatourism.org/destination/pazhayapalli-changanacherry/485