பழைய உப்பு பாதை

பழைய உப்பு பாதை (Old Salt Route) என்பது ஐரோப்பாவின் வடக்கு ஜெர்மனியில் ஒரு இடைக்கால வர்த்தக பாதையாக இருந்தது. இது உப்பு சாலைகளின் பழங்கால வலையமைப்புகளில் ஒன்றாகும். அவை முதன்மையாக உப்பு மற்றும் பிற பொருட்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டன. ஜெர்மனியில் இது ஆல்டே சால்ஸ்ட்ராஸ் என்று குறிப்பிடப்பட்டது.

அந்த நேரத்தில் உப்பு மிகவும் மதிப்புமிக்கது; இது சில நேரங்களில் "வெள்ளை தங்கம்" என்று குறிப்பிடப்படுகிறது. சாலையில் கொண்டு செல்லப்படும் உப்பின் பெரும்பகுதி நாட்டின் வடக்கு மத்திய பகுதியில் உள்ள ஒரு நகரமான லுன்பர்க் அருகே உப்புநீரில் இருந்து தயாரிக்கப்பட்டு பின்னர் ஜெர்மனியின் பால்டிக் கடற்கரையில் உள்ள ஒரு முக்கிய துறைமுகமான லூபெக்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. [1]

வரலாறு தொகு

 
வரைபடம்: பழைய உப்பு பாதை
 
பழைய உப்பு பாதை: பிரீடென்ஃபெல்டே அருகே வரலாற்று நடைபாதை

வரலாற்றாசிரியர்கள் பொதுவாக பழைய உப்பு வழியை மிக நீண்ட பாதையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கின்றனர். இது நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையே ஒரு முக்கியமான இணைப்பாக செயல்பட்டது. கி.பி 956 முதல் லுன்பர்க்கையும், உப்பு படிமங்களை சுத்திகரிப்பதிலும், கொண்டு செல்வதிலும் அதன் பங்கை உறுதிப்படுத்தும் மிகப் பழமையான ஆவணங்களில் ஒன்று, அந்த ஆவணத்தின்படி, முதலாம் ஓட்டோ பேரரசர் லுன்பர்க்கில் உள்ள புனித மைக்கேல் மடாலயத்திற்கு உப்பு வேலைகளிலிருந்து சுங்க வருவாயை வழங்கினார். அந்த ஆரம்ப காலங்களில் கூட, நகரத்தின் செல்வம் இப்பகுதியில் காணப்படும் உப்பை அடிப்படையாகக் கொண்டது. [2] பழைய உப்பு பாதை 12 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் அதன் வெற்றியின் உச்சத்தை அடைந்தது. [1]

வர்த்தக பாதை லுன்பர்க்கிலிருந்து வடக்கு நோக்கி லூபெக் வரை சென்றது. அந்த துறைமுக நகரத்திலிருந்து, பெரும்பாலான உப்பு பல இடங்களுக்கு அனுப்பப்பட்டது, அவை பால்டிக் கடலில் முடிந்தன. பால்ஸ்டெர்போ உட்பட, ஸ்கேனியா சந்தையை பெருமையாகக் கொண்டுள்ளன. இடைக்காலத்தில் மிக முக்கியமான உணவான ஹெர்ரிங் பாதுகாப்பிற்காகவும், மற்ற உணவுகளுக்காகவும் இது பயன்படுத்தப்பட்டது. லூபெக் மற்றும் ஹன்சீடிக் வணிக தற்காப்பு கூட்டமைப்ப்பின் அதிகாரத்திற்கு உப்பு வர்த்தகம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. [3]

உப்பு போக்குவரத்து தொகு

குதிரை வண்டிகள் லுன்பேர்க்கிலிருந்து உல்பை ஆர்ட்லென்பர்க்கில் (லாயன்பேர்க்கிற்கு அருகில்) எல்பா ஆற்றின் குறுக்கு வழியிலும், அங்கிருந்து மோல்ன் வழியாக லூபெக்கிலும் கொண்டு வந்தன. எவ்வாறாயினும், வரலாற்று வர்த்தக பாதை ஹீத்லேண்ட், வூட்ஸ் மற்றும் சிறிய கிராமங்கள் வழியாக மேலோட்டமான, மணல் மற்றும் பெரும்பாலும் சேறும் சகதியுமான சாலைகளால் ஆனது. இதனால் உப்பு போக்குவரத்து ஒரு கடினமான பணியாக அமைந்தது. கூடுதலாக, மதிப்புமிக்க சரக்கு திருடர்கள், கொள்ளைக்காரர்கள் மற்றும் கொள்ளையர்களை ஈர்த்ததால், இந்த பாதை ஓரளவு ஆபத்தாகவும் இருந்தது. நீண்ட மலையேற்றத்தை மேற்கொள்பவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் மற்றும் எந்தவொரு பயணத்திலும் ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான விலைமதிப்பற்ற படிகப் பொருளை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்பதும், நிலப்பரப்பு வழிகள் வழியாக உப்பை நகர்த்துவது மிகவும் விலை உயர்ந்தாக இருந்தது. [1] [4]

இருப்பினும், 1398 ஆம் ஆண்டில், ஐரோப்பாவின் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் நீர்வழிகளில் ஒன்றான ஸ்டெக்னிட்ஸ் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது. இதனால் ஒரே கப்பலில் அதிக உப்பினை, அதிக எளிதாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல முடிந்தது. இந்த மாற்றம் வணிகர்கள் எப்போதும் வளர்ந்து வரும் தேவையின் உப்பு தேவைகளை பூர்த்தி செய்ய உதவியது. [4] உதாரணமாக, 16 ஆம் நூற்றாண்டில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19,000 டன் தயாரிப்பு லென்பேர்க்கிலிருந்து லூபெக்கிற்கு நிலம் அல்லது நீர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும், ஒவ்வொரு பயணத்தையும் முடிக்க இருபது நாட்கள் ஆனது. [1]

சுற்றுலா தொகு

நவீன காலங்களில், உப்பு பாதையில் ஒரு பயணம் இயற்கையும் கலாச்சாரமும் நிறைந்ததாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இந்த பயணத்தை நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ மேற்க்கொள்ளலாம். பழைய வர்த்தக பாதையில் பல கண்கவர் காட்சிகள் உள்ளன. இந்த ஆர்வமுள்ள இடங்களில் வரலாற்று நகரங்களான லுன்பேர்க், மோல்ன் மற்றும் லூபெக் ஆகியவை அடங்கும். அவை அழகிய முகப்புகள் மற்றும் சிறிய சந்துப்பாதைகளால் சிறப்பிக்கப்படுகின்றன. மேலும் பார்வையாளர்களுக்கு இது ஒரு முக்கிய ஈர்ப்பாகும். [1]

மிதிவண்டி பாதை தொகு

ஒரு மிதிவண்டி பாதையாக, ஒரு பிரதான மற்றும் ஒரு அழகிய பாதையின் விருப்பங்கள் உள்ளன. குறுகிய பிரதான பாதை (95 கி.மீ) மிதிவண்டி ஓட்டுநர்களை லாயன்பர்க், பெச்சென், முல்ன் மற்றும் கிரம்சி போன்ற பல அழகிய சிறிய நகரங்கள் வழியாக வழிநடத்துகிறது. மேலும் லூன் மடாலயத்தையும் கடந்து செல்கிறது. இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த அழகிய பாதை குறிப்பாக கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. 106 கிலோமீட்டர் நீளமுள்ள (66 மைல்) பாதை விட்ஸீஸில் உள்ள பிரதான பாதையிலிருந்து விலகி, லாயன்பர்க் இயற்கை பூங்கா வழியாக தொடர்கிறது. மேலும் லூபெக்கிற்கு சற்று முன்னர் பிரதான பாதையில் மீண்டும் இணைகிறது. [5]

லுன்பர்க் ஹீத் தொகு

முன்பு, லுன்பர்க்கைச் சுற்றியுள்ள பகுதி பசுமையான காடுகளில் மூடப்பட்டிருந்தது. ஆனால் இடைக்கால உப்புப் பணிகளுக்கான உப்பு நீரை கொதிக்க வைக்கவும் சுத்திகரிக்கவும் பயன்படும் எரிபொருள் மரத்தை சார்ந்தது என்பதால், காடுகளின் பெரும்பகுதி வெட்டப்பட்டது. பூக்கும் தாவர குடும்பமான கலூனா பின்னர் அந்த பகுதியில் வளர ஆரம்பித்தது. இது ஒரு நிலப்பரப்பாக மாற உதவுகிறது. இப்போது இது பசுமையாக பூக்கும் போது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. [6]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Sell, Nora. Die Alte Salzstraße – von Lüneburg nach Lübeck
  2. St. Michaelis Lüneburg. “St. Michaelis Lüneburg - die Bachkirche im Norden”. "Archived copy". Archived from the original on 2009-03-17. பார்க்கப்பட்ட நாள் 2009-04-21.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. Pulsiano, Phillip and Wolf, Kirsten. Medieval Scandinavia. Taylor & Francis. 1993. ISBN 0-8240-4787-7, p. 651.
  4. 4.0 4.1 DHL. “The Old Salt Road – Logistics networks today and yesterday”
  5. "Schleswig-Holstein. "Old Salt Street"". Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2009-04-21.
  6. Germany National Tourist Board. “Old Salt Road – Ancient white gold trading route”.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_உப்பு_பாதை&oldid=2976422" இலிருந்து மீள்விக்கப்பட்டது