பழ. அதியமான்

தமிழ் எழுத்தாளர்


பழ. அதியமான் (பி. 1961) தமிழ் எழுத்தாளர். தமிழ்ச் சிந்தனை வரலாறு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர். அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணியாற்றுகிறார். 1930களில் மணிக்கொடி இதழின் ஆசிரியராக இருந்த வ.ரா. என்னும் வ. ராமசாமி அய்யங்கார் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

பழ. அதியமான்
பிறப்புஅதியமான்
1961
விழுப்புரம் மாவட்டம்
இருப்பிடம்சென்னை
கல்விகலை முதுவர், முனைவர்
பணிநிகழ்ச்சி அமைப்பாளர்
பணியகம்அகில இந்திய வானொலி

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்தவர். மயிலம், கடலூர் மற்றும் சென்னையில் பள்ளி, கல்லூரிப் படிப்பு பயின்றவர். பெரும்பாலும் காலச்சுவடு இதழில் எழுதிவருபவர். அண்மையில் இவர் எழுதிய "விருது வாங்கலியோ விருது" பெரிதும் பேசப்பட்டதாகும்.

நூல்கள்

தொகு
  1. பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜிலு நாயுடு வரலாறு
  2. சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்

ஆய்வுகள்

தொகு
  1. தி.ஜ.ர.
  2. அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்
  3. சக்தி வை. கோவிந்தன் (தமிழின் முன்னோடி பதிப்பாளுமை) 2008

தொகுப்பு

தொகு
  1. சென்னைக்கு வந்தேன் (பலரது கட்டுரைகள்)
  2. கு. அழகிரிசாமி சிறுகதைகள் மொத்த தொகுப்பு
  3. பாரதி கவிதைகள் (இளைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் எளிமையாக சந்தி பிரித்திருக்கிறார்)

நூல்கள் பற்றிய குறிப்புகள்

தொகு
  1. சாகித்திய அகாதமியின் நவீன இலக்கியச் சிற்பியின் வரிசையில் அமைந்த தி.ஜ.ர (தி.ஜ.ரங்கநாதன்) பற்றியது இவரது முதல் நூல்
  2. காந்தியின் "என் இந்தியா" வின் ஆசிரியராக இருந்த ஜார்ஜ் சோசப் அவர்களின் ஆளுமையை வெளிப்படுதியது "அறியப்படாத ஆளுமை" இவரது இரண்டாவது நூல்
  3. பதிப்பைத் தொழிலாக மாற்றிய முன்னோடி பதிப்பாளுமையான வை.கோவிந்தனின் வாழ்க்கையும் பணியும் பற்றிய நூல் மூன்றாவது.
  4. சென்னைக்கு வந்த எழுத்தாளர்கள் சென்னையைப் பற்றி விருப்பாகவும், வெறுப்பாகவும், வியப்பாகவும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு "சென்னைக்கு வந்தேன்"

விருதுகள்

தொகு

சிறந்த கட்டுரைகான சின்ன குத்தூசி நினைவு அறக்கட்டளை விருது (2012) பரணிடப்பட்டது 2013-10-20 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு
  1. காலச்சுவடு: வரலாற்றை அகழ்ந்தெடுக்கும் படைப்பு பரணிடப்பட்டது 2012-11-14 at the வந்தவழி இயந்திரம்
  2. தி இந்து : வரலாற்றின் பின் ஒரு தொடர் ஓட்டம்
  3. தி இந்து : இது இளந்தலைமுறைக்கான பாரதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழ._அதியமான்&oldid=3249135" இலிருந்து மீள்விக்கப்பட்டது