பவ்லா
பவ்லா (Bavla) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகாராட்சி ஆகும்.
பவ்லா Bavla | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | அகமதாபாத் |
• தரவரிசை | 45,000 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | குசராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
மக்கள் தொகையியல்
தொகு2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 45,000 ஆகும். இம்மக்கள் தொகையில் 53 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 47 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். பவ்லா நகரின் படிப்பறிவு சதவீதம் 69.7% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 76.8% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 61.7% ஆகும். மக்கள் தொகையில் 13 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.