பசார் அல்-அசத்
பசார் அல்-அசத் (Baššār al-Asad, அரபு மொழி: بشار الأسد; பிறப்பு: 11 செப்டம்பர் 1965) சிரியாவின் அரசியல்வாதியும், முன்னாள் இராணுவ அதிகாரியும், மருத்துவரும் ஆவார். இவர் சூலை 2000 முதல் திசம்பர் 2024 இல் பதவி கவிழ்க்கும் வரை சிரியாவின் 19-வது அரசுத்தலைவராகப் பணியாற்றினார்.[1] அரசுத்தலைவராக இருந்தபோது, அசாத் சிரிய ஆயுதப் படைகளின் முதல் பெரும் படைத்தலைவராகவும், அரபு சோசலிச பா'அத் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.[2] இவர் 1971 முதல் 2000 இல் இறக்கும் வரை அரசுத்தலைவராக இருந்த அபீசு அல்-அசத்தின் மகன் ஆவார்.
பசார் அல்-அசத் Bashar al-Assad | |
---|---|
2024 இல் அசத் | |
19-ஆவது சிரிய அரசுத்தலைவர் | |
பதவியில் 17 சூலை 2000 – 8 திசம்பர் 2024 | |
முன்னையவர் |
|
அரபு சோசலிச பாத் கட்சியின் பொதுச் செயலாளர் | |
பதவியில் 24 சூன் 2000 – 8 திசம்பர் 2024 | |
முன்னையவர் | அபீஸ் அல் ஆசாத் |
பின்னவர் | எவருமில்லை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பசார் அல்-அசத் 11 செப்டம்பர் 1965 திமிஷ்கு, சிரியா |
குடியுரிமை | உருசியா (2024 முதல்) |
அரசியல் கட்சி | பா'அத் |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய முன்னேற்ற முன்னணி |
துணைவர் | அசுமா அல்-அசத் (தி. 2000) |
பிள்ளைகள் | 3 |
பெற்றோர் |
|
வாழிடம் | |
முன்னாள் கல்லூரி | திமிசுகு பல்கலைக்கழகம் (மருத்துவப் பட்டம்) |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | சிரியா |
கிளை/சேவை | சிரிய படைத்துறை |
சேவை ஆண்டுகள் | 1988–2024 |
தரம் | படைத்துறை உயர் தளபதி |
அலகு | குடியரசுப் படை (2000 வரை) |
கட்டளை | சிரியப் படைத்துறை |
போர்கள்/யுத்தங்கள் | சிரிய உள்நாட்டுப் போர் |
1994 இல், இவரது மூத்த தமையன் பசெல் அல்-அசத் வாகன விபத்தில் இறந்ததை அடுத்து, பசார் அல்-அசத் முடிக்குரிய வாரிசாக சிரியாவுக்கு வரவழைக்கப்பட்டார். அசத் இராணுவ அகாதமியில் இணைந்தார். 1998 இல் லெபனான் மீதான சிரிய ஆக்கிரமிப்புக்குப் பொறுப்பேற்றார். 2000 சூன் 10 இல் தந்தை இறந்ததை அடுத்து, 2000 சூலை 17 அன்று, அசத் அரசுத்தலைவரானார்.[3] 2001-02 இல் நடந்த தொடர்ச்சியான ஒடுக்குமுறைகள் தமாசுகசு வசந்த எழுச்சியை முடிவுக்குக் கொண்டுவந்தன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The rise of Syria's controversial president Bashar al-Assad". ABC News. 7 April 2017. Archived from the original on 16 June 2017. பார்க்கப்பட்ட நாள் 19 June 2017.
- ↑ "Syrian President Bashar al-Assad: Facing down rebellion". BBC News. 21 October 2015. Archived from the original on 11 April 2019. பார்க்கப்பட்ட நாள் 21 June 2018.
- ↑ "ICG Middle East Report: Syria Under Bashar" (PDF). European Parliament. 11 February 2004. பார்க்கப்பட்ட நாள் 30 November 2024.
வெளி இணைப்புகள்
தொகு- Profile பரணிடப்பட்டது 2011-09-19 at the வந்தவழி இயந்திரம் at the LookLex Encyclopedia
- Unofficial website