பஹ்ராம் ஜங் மஸ்ஜித்

சென்னையில் உள்ள பள்ளிவாசல்

பஹ்ராம் ஜங் பள்ளிவாசல் (Bahram Jung Mosque) என்பது சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒரு தொழுகைப் பள்ளிவாசல் ஆகும். இது 1789 மற்றும் 1795 க்கு இடையில் முகம்மது அப்துல்லா காதிர் நவாஸ் கான்பகதூர் பஹ்ராம் ஜங்கினால் கட்டப்பட்டதாகும், இவர் ஆற்காடு நவாப் முகமது அலி கான் வாலாஜாவின் அவையில் கவிஞராக இருந்தார்.

முகமது அலிகான் வாலாஜா

பஹ்ராம் ஜங் மற்றும் அவரது சகோதரர் ஹபீஸ் அகமத் கான் இருவரும், வாலஜாவின் மறைவிற்குப் பின் அவரை அடுத்த வந்து உம்தாத்துல் உம்ராவின் ஆட்சிக்காலத்தில் ஆற்காடு நவாப்பிற்காக பெரும் சொத்துக்களை இழந்தார். இறுதியில் இவர்களின் நிலங்கள் கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டன.

உசாத்துணைகள்

தொகு
  • சு. முத்தையா, ed. (2008). Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. Vol. 1. Palaniappa Brothers. p. 125.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஹ்ராம்_ஜங்_மஸ்ஜித்&oldid=3437843" இலிருந்து மீள்விக்கப்பட்டது