பாகமண்டலா நாடு சட்டமன்றத் தொகுதி
பாகமண்டலா நாடு சட்டமன்றத் தொகுதி (Bhagamandala Nad Assembly constituency) என்பது கூர்க் சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாகச் செயல்பட்டது. இது 1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் குடகு மாநிலத்தின் சட்டமன்றமாகும்.[1] பாகமண்டலாப் பகுதியின் பொருளாதாரம் தேன் மற்றும் ஏலக்காய் ஏற்றுமதியால் ஆதிக்கம் செலுத்தியது.[2] 1956ஆம் ஆண்டில் இத்தொகுதி நீக்கப்பட்டது.
பாகமண்டலா நாடு | |
---|---|
முன்னாள் மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நீக்கப்பட்டது தொகுதி | 1956 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மாநிலம் | குடகு |
1952 தேர்தல்
தொகுமூன்று வேட்பாளர்கள் 1952 சட்டமன்றத் தேர்தலில் பாகமண்டல நாடு தொகுதிக்குப் போட்டியிட்டனர்:
- இந்தியத் தேசிய காங்கிரசின் கொனானா தேவியா 2,347 வாக்குகள் (58.62%) பெற்று வெற்றி பெற்றார்.
- பட்டமடா பொன்னப்பா, சுயேச்சை, 1,384 வாக்குகள் (34.57%)
- ஜெயராம் சிங், சுயேச்சை, 273 வாக்குகள் (6.82%)[3]
சுமார் 80.3% வாக்காளர்கள் வாக்களித்த இத்தேர்தலில் வாக்களித்தனர். 1952ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், இங்குதான் அதிக வாக்குகள் பதிவாகியிருந்தது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ India Votes. 1968. p. 355.
- ↑ Census of India, 1961. 1965. p. 30.
- ↑ Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1951 TO THE LEGISLATIVE ASSEMBLY OF COORG
- ↑ The March of India. 1957. p. 10.