பாகவி (சிற்றிதழ்)

பாகவி இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1952ம் ஆண்டு முதல் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • மௌலவி ரஹ்மதுல்லாஹ் மஆலி பாகவி சாகிப்.

இவர் ஜெமினி படத்தயாரிப்பு நிறுவனக் கதைத்துறையில் பணியாற்றியுள்ளார். பல உருது நூல்களை தமிழில் மொழிபெயர்த்துமுள்ளார் என அறியமுடிகின்றது. இவர் ஏற்கனவே பத்ஹுல் இஸ்லாம் எனும் சஞ்சிகையிலும் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார்.

பொருள்

தொகு

'பாகவி' என்ற அரபுப் பதம் 'நிலையானது' என்று பொருள்படும்.

உள்ளடக்கம்

தொகு

இவ்விதழ் சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற இலக்கிய அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. இஸ்லாமிய அடிப்படையில் எழக்கூடிய பிரச்சினைகளுக்கு விளக்கம் வழங்கும் ஆய்வுக் கட்டுரைகளையும் கொண்டிருந்தது. இந்தியா சுதந்திரமடைந்த பின்பு தேசிய உணர்வினை இந்திய மக்களிடம் ஏற்படுத்துவதற்கு இவ்விதழ் கூடிய பங்களிப்பினை வழங்கியுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகவி_(சிற்றிதழ்)&oldid=736059" இலிருந்து மீள்விக்கப்பட்டது