பாகுலாகி ஆறு

பாகுலாகி ஆறு (Bakulahi River, இந்தி: बकुलाही नदी, உருது: باکلاهی‎) என்பது இந்திய நாட்டின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் ரேபரேலி மாவடத்தில் பாரத்பூர் ஏரியில் தோன்றுகிற ஒரு ஆறாகும். இந்நதியின் கரையெங்கும் விவசாய நிலப்பகுதி மிகுதியாகவும் மக்கள் அடர்த்தி அதிகமாகவும் காணப்படுகிறத[1][2]

பாகுலாகி ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்சாய்நதியின் துணையாறு

வரலாறு

தொகு

பாகுலாகி ஆறு மிகப்பழமையான ஒரு ஆறாகும். வேதங்களிலும் பண்டைய இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரத்திலும் இந்நதியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.[3] பண்டைய காலத்திலும் வரலாற்றிலும் பால்குனி என்றழைக்கப்பட்ட இந்நதி தற்பொழுது பாகுலாகி ஆறு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றில் அதிகமாக மணலும் கூழாங்கற்களும் காணப்படுவதால் பாலுகினி [4] என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

தோற்றம்

தொகு

பாரத்பூர் ஏரியில் தோன்றுகிற இந்நதி உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் ரேபரேலி மாவடத்திற்கும் பிரத்தாப்புகர் மாவடத்திற்கும் இடையில் பாய்ந்து, மந்தாட்டா வட்டம் காயூர்னி கிராமத்தில் கோமதியாற்றின் துணை ஆறான சாய் நதியில் கலக்கிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "संसद में गूंजी थी बकुलाही की धारा" (in Hindi). Jagran. May 12, 2012. http://www.jagran.com/news/spotlight-9243850.html. 
  2. "Location: Policy Level". Tarun Bharat Sangh. http://tarunbharatsangh.in/location-policy-level/. 
  3. सो अपश्यत राम तीर्थम् च नदी बालकुनी तथा बरूठी,गोमती चैव भीमशालम् वनम् तथा।
  4. "Some physicochemical characteristics of River Bakulahi within Pratapgarh District" (PDF). Connect Journals. 2012-06-15.
  5. "‘राज और समाज’ का साझा प्रयास: बकुलाही पुनरोद्धार" (in Hindi). Hindi.IndiaWaterPortal.org. 29 July 2014 இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140808061324/http://hindi.indiawaterportal.org/node/45746. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகுலாகி_ஆறு&oldid=3633260" இலிருந்து மீள்விக்கப்பட்டது