பாக்கித்தானில் புகையிலைத் தொழில்
பாக்கித்தானில் புகையிலை தொழில் (Tobacco industry in Pakistan) விவசாயம், உற்பத்தி, விநியோகம் மற்றும் பாக்கித்தானில் சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் முக்கிய வேலைவாய்ப்பை வழங்கும் தொழிலாக உள்ளது.[1] பெரும்பாலான புகையிலை சாகுபடிகள் சார்சாத்தா மாவட்டம், மார்தன் மாவட்டம், நவ்செரா மாவட்டம் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள சுவாபி மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.[2]
பாக்கித்தானில் 0.25 சதவீத பாசன நிலத்தில் புகையிலை பயிரிடப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, 34,000 எக்டேர் பரப்பளவில் புகையிலை பயிரிடப்பட்டது. இது சில ஆண்டுகளுக்கு முன்பு 43,000 எக்டேராக இருந்தது.[3]
சுமார் 60 சதவீத சந்தைப் பங்கை பாக்கித்தான் புகையிலை நிறுவனமும் பிலிப் மோரிசு நிறுவனமும் வைத்துள்ளன.[4] ஆண்டுதோறும், புகையிலை நுகர்வு காரணமாக பாக்கித்தானில் கிட்டத்தட்ட 160,000 உயிர்கள் இழக்கப்படுகின்றன.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Riaz, Ghulam Abbas, Nisma (February 12, 2023). "Pakistan's Cigarette Trade — A double-edged sword". Profit by Pakistan Today.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Khan, Muqaddam (August 8, 2019). "Swabi tobacco growers turn to vegetable farming". DAWN.COM.
- ↑ Khan, Mubarak Zeb (December 19, 2016). "Shrinking tobacco cultivation". DAWN.COM.
- ↑ Niazi, Abdullah (October 2, 2022). "Crop talk: Deadly product, cut-throat competition". Profit by Pakistan Today.
- ↑ "160,000 People are Killed Every Year in Pakistan from Tobacco Consumption | IBEX" (in ஆங்கிலம்). 2019-05-08. பார்க்கப்பட்ட நாள் 2023-09-18.