பாக்கித்தான் இராணுவ அருங்காட்சியகம்
பாக்கித்தான் இராணுவ அருங்காட்சியகம் (Pakistan Army Museum) பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணம் இராவல்பிண்டி நகரத்தில் அமைந்துள்ள ஓர் இராணுவ அருங்காட்சியகமாகும்[1][2]. 1961 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது[3]. பாக்கித்தான் இராணுவத்தின் கடந்தகால நினைவுச்சின்னங்கள் மற்றும் எச்சங்களை படங்கள் மூலம் பாதுகாப்பது இதன் முக்கிய நோக்கமாகும். பாக்கித்தானின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் பாக்கித்தான் இராணுவ அருங்காட்சியகமும் ஒன்றாகும் [3]
پاک فوج متحف | |
அருங்காட்சியகத்திற்குள் ஒரு விமானம் | |
நிறுவப்பட்டது | அக்டோபர் 24, 1961 |
---|---|
அமைவிடம் | இராவல்பிண்டி படைத்தளம், இராவல்பிண்டி, பஞ்சாப் (பாக்கித்தான்), பாக்கித்தான் |
வகை | இராணுவம் |
சேகரிப்பு அளவு | இராணுவத் தளவாடங்கள், கைப்பற்றப்பட்ட பீரங்கிகள் மற்றும் வானூர்திகள், ஓவியங்கள். |
அமைவிடம்
தொகுபிரித்தானிய காலத்து வீரர்களின் குடியிருப்பு கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள பாக்கித்தான் இராணுவத்தின் பொது தலைமையகக் கட்டிடத்தில் இந்த இராணுவ அருங்காட்சியகம் அமைந்துள்ளது [2].
காட்சிப்பொருள்கள்
தொகுஇராணுவப் படைகளின் மாற்றத்தை சித்தரிக்கும் அரிய பழைய கால ஆயுதங்கள் மற்றும் சீருடைகள் ஆகியவையும் இந்த அருங்காட்சியகக் காட்சிபொருள்களில் அடங்கும். நடைமுறையில் பயன்படுத்தப்படும் சில நடுத்தர வகை எம்4 செர்மேன் பீரங்கிகளும் இங்கு இடம்பெற்றுள்ளன [2].
ஆயுதங்கள் மற்றும் போர் வரலாற்று ஆர்வலர்கள் கண்டிப்பாகக் காணவேண்டிய ஓர் அருங்காட்சியகமாக இது கருதப்படுகிறது. மேலும் இந்த அருங்காட்சியகத்தில் முகலாயர் காலந்தொட்டு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் முதல் நவீன ஆயுதங்கள் வரை வைக்கப்பட்டுள்ளன. புதிய அருங்காட்சியகக் கட்டிடத்தில் பாக்கித்தான் இராணுவத்தின் பரிணாம வளர்ச்சி விரிவான வரலாறாக வழங்கப்படுகிறது [1].
பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தம்
தொகுபாக்கித்தான்-ஆப்கானித்தான் எல்லையிலுள்ள பழங்குடிப் பகுதிகளில் பயங்கரவாதத்திற்கு எதிராக பாக்கித்தான் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான் உலகளாவிய யுத்தம் ஆகியனவற்ருக்காக ஒரு சிறப்பு காட்சியகம் இங்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Revamped army museum exhibits history of warfare, arms in subcontinent, Dawn (newspaper), Updated 21 February 2016, Retrieved 14 September 2017
- ↑ 2.0 2.1 2.2 Surviving Sherman Dozers பரணிடப்பட்டது 2019-03-29 at the வந்தவழி இயந்திரம், Retrieved 14 September 2017
- ↑ 3.0 3.1 "Nation building and the Pakistan army, 1947-1969 - Raymond A. Moore - Google Books". Books.google.com. பார்க்கப்பட்ட நாள் 14 September 2017.
.