பாக்கிஸ்தான் குண்டுவெடிப்புகள், ஜூன் 2017

பாக்கிஸ்தானின் மூன்று நகரங்களில் 23 ஜூன் 2017 அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர். குவெட்டா நகரில் காவலரைக் குறிவைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து பறசினார் (Parachinar) பகுதியில் சந்தைப்பகுதியில் இரண்டு குண்டு வெடிப்புகள் நடந்தது மற்றும் கராச்சி நகரில் காவலரைக் கொல்லும் முயற்சியில் குண்டு வெடித்தது.[1]

குண்டுவெடிப்புகள்

தொகு

குவெட்டா குண்டுவெடிப்பு

தொகு

தற்கொலை வாகனம் உள்ளூர் நேரப்படி 8:45 மணியளவில் சுகுதா சவுக் (Shuhada Chowk) பகுதியில் வெடித்தது.[2] தாக்குதல்தாரியின் நோக்கம் அங்கு இருந்த காவலர் மீது வாகனத்தை மோதுவதாக இருந்தது. அம்முயற்சியில் தோல்வியடைந்த போது வாகனம் வெடித்தது. வெடிப்பதற்கு முன்னர் காவலர் தாக்குதல்தாரியை வாகனத்தை விட்டு இறங்குமாறும் வாகனத்தைச் சோதனையிட வேண்டும் எனக் கூறியபோது தாக்குதல்தாரி விசையை அழுத்தி வாகனத்தை வெடிக்கச் செய்தார்.

பறசினார் குண்டுவெடிப்பு

தொகு

குவெட்டா குண்டு வெடிப்பு நிகழ்ந்த சில மணிகளுக்குப் பின்னர் பிறசினார் பகுதியின் சந்தைப் பகுதியில் இரண்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மாலை 5:00 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. இக்குண்டு வெடிப்பில் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களைக் குறிவைத்து இரண்டாவது குண்டு வெடித்தது. இரண்டாவது குண்டு தற்கொலைதாரியால் வெடிக்கப்பட்டது.[3]

பொறுப்பேற்பு

தொகு

இக்குண்டுவெடிப்புகளுக்கு பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் மற்றும் இசுலாமிய அரசு தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மேற்கோள்கள்

தொகு