பாசிபாஸ்

கிரேக்கத் தொன்மங்களில் குறிப்பிடப்படும் சூரியக் கடவுளான ஹீலியோஸின் மகள்

கிரேக்க தொன்மவியலில் குறிப்பிடப்படும், பாசிபாஸ் (Pasiphaë) என்வர் கிரீட் தீவின் ஒரு அரசி ஆவார்.

ஜீக்மா, காசியான்டெப் அருங்காட்சியகத்தில் இருந்து மொசைக் கல் சித்தரிப்பில், பாசிஃபாஸ் ஒரு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறார்,

குடும்பம் தொகு

சூரியனின் டைட்டன் கடவுளான ஹீலியோஸின் மகள்தான் பாசிபாஸ். [1] [2] இவர் சர்க்கஸ், ஈய்ட்ஸ் மற்றும் பெர்சஸ் ஆஃப் கொல்கிஸின் சகோதரியும் ஆவார், இவர் கிரீட்டின் மன்னர் மினோசை மணந்தார் . மினோசுடனான வாழ்வில், இவர் அககாலிஸ், அரியட்னே, ஆண்ட்ரோஜியஸ், கிளௌகஸ், டீகாலியன், பீட்ரா, ஜெனோடைஸ் கேட்ரியஸ் ஆகியோரின் தாயானார். மேலும் மினோட்டூர் என்று அழைக்கப்படும் ஆஸ்டரியனின் தாயும் ஆவார்.

 
டெடாலசு மரத்தலான மாட்டை பாஸிபசுக்கு வழங்குகிறார்: முதல் நூற்றாண்டய, பாம்பீ, வெட்டியின் மாளிகை உரோமானிய சுவரோவியம்

மினோட்டூர் தொகு

பொசைடனின் ஒரு சாபத்திற்குப் பிறகு, பாசிபாஸ் போசைடன் அனுப்பிய ஒரு வெள்ளை காளமீது காமுற்று அதனுடன் இணைந்து தாயாகிறார். [3]

கிரேக்க மொழியின் மினோவான் புராணத்தின்படி, [4] காளையுடன் புணர்திட, இவருக்கு ஏதெனியன் கலைஞரான டெடாலசால் [5] ஒரு மூடியுடன்கூடிய சிறிய மரத்தினாலான மாடு உருவாக்கபடுகிறது. அந்த மர மாட்டுக்குள் தன்னை பொருத்திக்கொண்டு இவர் காளையுடனான தனது கலவி ஆசையை தீர்த்துக் கொள்கிறார். [6]

குறிப்புகள் தொகு

  1. Hesiod, Theogony 346.
  2. Pasiphaë was thus the half-sister of Aeëtes and of Circe. Diodorus Siculus (4.60.4) made the mother of Pasiphaë the island-nymph Crete herself.
  3. Pseudo-Apollodorus, Bibliotheke 3.1.4
  4. Specific astrological or calendrical interpretations of the mystic mating of the "wide-shining" daughter of the Sun with a mythological bull, transformed into an unnatural curse in Hellene myth, are prone to variability and debate.
  5. Daedalus was of the line of the chthonic king at Athens Erechtheus.
  6. Greek myth characteristically emphasizes the accursed unnaturalness of a mystical marriage conceived literally as merely carnal: a fragment of Bacchylides alludes to "her unspeakable sickness" and Hyginus (Fabulae 40) to "an unnatural love for a bull".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிபாஸ்&oldid=3066615" இலிருந்து மீள்விக்கப்பட்டது