பசீர் ரிஸ் பூங்கா
(பாசிர் ரிஸ் பூங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாசிர் ரிஸ் பூங்கா சிங்கப்பூரில் உள்ள ஒரு கடற்கரை சார்ந்த பூங்கா ஆகும். இது சிங்கப்பூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. 71 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்து உள்ள இந்த பூங்காவினுள் 6 ஹெக்டேர் நிலத்தில் ஒரு சதுப்பு நில காடும் உள்ளது. இதன் மொத்த நீளம் 6.6 கி.மீ ஆகும்.
பொழுது போக்கு அம்சங்கள்
தொகுபலகை நடைபாதை வசதியுடன் கூடிய இந்த பூங்காவில், சேற்றை சார்ந்து வாழும் நண்டுகள், மீன்கள் , தாவரங்கள் போன்றவற்றை காணலாம். பறவைகளை காண்பதற்காக இங்கு மூன்று அடுக்கில் ஒரு கண்காணிப்பு கோபுரமும் உள்ளது. இங்குள்ள கடற்கரையில் விளையாட்டு திடல்களும், மற்ற பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன.
இங்கு செல்ல
தொகுஇந்த பூங்காவிற்கு செல்ல எஸ்.பி.எஸ் போக்குவரத்து கழகத்தின் சேவை எண் 403 பேருந்தில் பயணிக்கலாம். இந்த பேருந்துகளை எடுப்போர் பாசிர் ரிஸ் பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும்.
வெளி இணைப்புகள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2011-09-02 at the வந்தவழி இயந்திரம்
- [2]