பாசுக்கு நாடு (பெரும் பகுதி)
பாசுக்கு நாடு (Basque Country, பாசுக்கு: Euskal Herria) பாசுக்கு மக்களின் தாயகப் பகுதி ஆகும்.[1] இது அத்திலாந்திக்கு கடலோரத்தில் மேற்கு பிரனீசில் பிரான்சு, எசுப்பானியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. 16வது நூற்றாண்டிலிருந்தே பாசுக்கு மக்கள் வாழும் இப்பகுதியின் பெயர் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[2] 18ஆம் நூற்றாண்டிலிருந்து பாசுக்கு மக்களை தனியாக அடையாளப்படுத்தவும் தனிநாடு கோரியும் எழுச்சி பெற்றுள்ள பாசுக்கு தேசியவாதத்திற்கு முன்னமே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது.
Euskal Herria பாசுக்கு நாடு உசுக்கல் எர்ரியா | |
---|---|
பெரிய நகர் | பில்போ |
ஆட்சி மொழி(கள்) | பாசுக்கு மொழி, எசுப்பானியம், பிரான்சியம் |
பரப்பு | |
• மொத்தம் | 20,947 km2 (8,088 sq mi) |
• அடர்த்தி | 148.6/km2 (384.9/sq mi) |
இதில் எசுப்பானியாவின் தன்னாட்சி சமூகங்களான பாசுக்கு நாடு மற்றும் நவாரும் பிரான்சின் வடக்கு பாசுக்கு நாடும் அடங்கியுள்ளன.
வெவ்வேறு மண்டலங்களிலும் நாடுகளிலும் உள்ள ஒரே பண்பாட்டைப் பேணும் பாசுக்கு நாடு குறித்த கருத்துரு அரசியல் இயக்கமாக உருவாகியுள்ளது. இது பாசுக்கு மக்கள் வாழும் பகுதி, இவர்களது மொழி (பாசுக்கு மொழி), பண்பாடு மற்றும் மரபுகள் ஒன்றேயாகும்.[3] இருப்பினும் இங்கு வாழ்வோர் அனைவருமே தங்களை பாசுக்கு மக்களாக அடையாளப்படுத்திக் கொள்வதில்லை; 1996 மக்கள்தொகை கணக்கெடுப்பில் நவாருக்கு தென்பகுதியில் 71% குடிமக்கள் தங்களை பாசுக்காக அடையாளப்படுத்தவில்லை. இப்பகுதியில் 53% மக்கள் பாசுக்கு மொழியை ஆதரிக்க ஒப்பவில்லை.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Trask, R.L. The History of Basque Routledge: 1997 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-13116-2
- ↑ "Euskal Herri". Euskaltzaindia. பார்க்கப்பட்ட நாள் 22 August 2012.
- ↑ Mughal, Muhammad Aurang Zeb. 2012. Spain. Steven L. Denver (ed.), Native Peoples of the World: An Encyclopedia of Groups, Cultures, and Contemporary Issues, Vol. 3. Armonk, NY: M .E. Sharpe, pp. 674–675.
- ↑ "Euskal Herriko Soziolinguistikazko Inkesta 1996 – Nafarroa" (PDF). Eusko Jaurlaritza, Nafarroako Gobernua, EKE. 1997. பார்க்கப்பட்ட நாள் 6 January 2013.