பாசுபரசு முப்புளோரோயிருகுளோரைடு

வேதிச் சேர்மம்

பாசுபரசு முப்புளோரோயிருகுளோரைடு (Phosphorus trifluorodichloride) என்பது PF3Cl2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த சகப்பிணைப்பு மூலக்கூறு முக்கோண இரட்டைப் பட்டைக்கூம்பு வடிவத்தை ஏற்றுள்ளது. மத்தியிலுள்ள பாசுபரசு அணு sp3d எலக்ட்ரான் கலப்பினத்தையும், மூலக்கூறு சமச்சீரற்ற மின்சுமை பகிர்வாலும் ஆக்கப்பட்டுள்ளன. பாசுபரசு முப்புளோரோயிருகுளோரைடு விரும்பத்தகாத வாசனையுடன் நிறமற்ற வாயுவாகத் தோன்றுகிறது. -8 ° செல்சியசு வெப்பநிலையில் இது நீர்மமாக மாறும்.

பாசுபரசு முப்புளோரோயிருகுளோரைடு
Phosphorus trifluorodichloride
இனங்காட்டிகள்
ChemSpider 10331606
InChI
  • InChI=1S/Cl2F3P/c1-6(2,3,4)5
    Key: PYMHWNZNAIBFHU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23237515
  • FP(F)(Cl)(Cl)Cl
பண்புகள்
Cl2F3P
வாய்ப்பாட்டு எடை 158.87 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் ஆண்டிமனி முப்புளோரோயிருகுளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பாசுபரசு முப்புளோரைடுடன் குளோரின் வாயுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பாசுபரசு முப்புளோரோயிருகுளோரைடு உருவாகும்.[1]

PF3 + Cl2 → PF3Cl2

பண்புகள்

தொகு

பாசுபரசு முப்புளோரோயிருகுளோரைடு கட்டமைப்பில் P-F பிணைப்பின் பிணைப்பு நீளம் வளையத்தின் அச்சுக்கு செங்குத்தாக இருக்கையில் 1.546 Å ஆகவும், அச்சு நிலையில் 1.593 ஆகவும் P-Cl பிணைப்பின் பிணைப்பு நீளம் 2.004 Å ஆகவும் உள்ளன. மூலக்கூறில் குளோரின் அணுக்கள் வளையத்தின் அச்சுக்கு செங்குத்து நிலையில் உள்ளன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 French, Richard J.; Hedberg, Kenneth; Shreeve, Jeanne M.; Gupta, Krishna D. (August 1985). "Dichlorotrifluorophosphorane (PCl2F3): molecular structure by gas-phase electron diffraction and quadratic force field". Inorganic Chemistry 24 (18): 2774–2777. doi:10.1021/ic00212a014.