பாச்சலூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு சிற்றுந்து மூலம் செல்ல வேண்டும். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் இருந்து பாச்சலூர்க்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இப்பகுதியில் வனவிலங்குகள் சிறுத்தை, செந்நாய், கரடி, புள்ளிமான், கடமான், வரையாடு, மலை அணில், யானை, காட்டுமாடு, நீலகிரி கருங்குரங்கு, சாம்பல் நிறக் குரங்கு, தேவாங்கு, காட்டுப்பன்றி, முள்ளம் பன்றி, சருகுமான், கேளையாடு, முயல், கீரி, புனுகு பூனை, காட்டு எலி, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், தவளை, தேரை, ஆமை, மீன் வகைகள். வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் ஏறத்தாழ 215 விதமான பறவை இனங்கள் காணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாச்சலூர்&oldid=1466320" இலிருந்து மீள்விக்கப்பட்டது