பாடலனார் என்பவர் இலக்கண உரையாசிரியர் அல்லது இலக்கண ஆசிரியர். இவரது உரைப்பகுதி [1] யாப்பருங்கலம் நூலின் விருத்தியில் இது காட்டப்பட்டுள்ளது. [2] இது 32 வகையான உத்திகளைக் காட்டுக்கிறது.

இவர் காட்டும் உத்திகள்

தொகு
  1. நுதலிப் புகுதல்
  2. ஓத்துமுறை வைத்தல்
  3. தொகுத்துக் காட்டல்
  4. வகுத்துக் காட்டல்
  5. முடிவிடம் கூறல்
  6. முடித்துக் காட்டல்
  7. தான் எடுத்து மொழிதல்
  8. பிறன் கோள் கூறல்
  9. சொல் பொருள் விரித்தல்
  10. இரட்டுற மொழிதல்
  11. ஏதுவின் முடித்தல்
  12. எடுத்த மொழியின் எய்த வைத்தல்
  13. இன்னது அல்லது இது என மொழிதல்
  14. தன்னினம் முடித்தல்
  15. எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல்
  16. மாட்டு எறிந்து ஒழுகல்
  17. பிறநூல் முடிந்தது தான் உடம்படுதல்
  18. தன்குறி வழக்கம் மிக எடுத்துரைத்தல்
  19. இறந்தது விலக்கல்
  20. எதிரது போற்றல்
  21. முன்மேற் கோடல்
  22. பின்னது நிறுத்தல்
  23. எடுத்துக் காட்டல்
  24. முடிந்தது முடித்தல்
  25. சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்
  26. தொடர்ச்சொல் புணர்த்தல்
  27. யாப்புறுத்து அமைத்தல்
  28. உரைத்தும் என்றல்
  29. விகற்பத்து முடித்தல்
  30. தொகுத்துடன் முடித்தல்
  31. ஒருதலை துணிதல்
  32. உய்த்து உணரவைத்தல்

பா வடிவில் உள்ளபடி

தொகு

நுதலிப் புகுதல் ஓத்துமுறை வைத்தல்
தொகுத்துக் காட்டல் வகுத்துக் காட்டல்
முடிவிடம் கூறல் முடித்துக் காட்டல்
தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல்
சொற்பொருள் விரித்தல் இரட்டுற மொழிதல்
ஏதுவின் முடித்தல் எடுத்த மொழியின்
எய்த வைத்தல் இன்னது அல்லது
இது என மொழிதல் தன்னினம் முடித்தல்
எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல்
மாட்டெறிந்து ஒழுகல் பிறநூல் முடிந்தது
தானுடம் படுதல் தன்குறி வழக்கம்
மிகவெடுத் துரைத்தல் இறந்தது விலக்கல்
எதிரது போற்றல் முன்மேற் கோடல்
பின்னது நிறுத்தல் எடுத்துக் காட்டல்
முடிந்தது முடித்தல் சொல்லின் முடிவின்
அப்பொருள் முடித்தல் தொடர்ச்சொற் புணர்த்தல்
யாப்புறுத் தமைத்தல் உரைத்தும் என்றல்
விகற்பத்து முடித்தல் தொகுத்துடன் முடித்தல்
ஒருதலை துணிதல் உய்த்துணர வைத்தல் [3]

மேற்கோள்

தொகு
  1. நூற்பா போன்று காணப்படுகிறது
  2. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 331
  3. என இவை பாடலனார் உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடலனார்&oldid=3456739" இலிருந்து மீள்விக்கப்பட்டது