பாண்டுரங் புருசோத்தம் சிரோட்கர்

இந்திய விடுதலைப் போராட்டக் கொங்கணியர்

பாண்டுரங் புருசோத்தம் சிரோட்கர் (Pandurang Purushottam Shirodkar) (12 டிசம்பர் 1916 - 5 செப்டம்பர் 2000) ஒரு விடுதலைப் போராளியும், கோவா சட்டமன்றத்தின் முதல் அவைத் தலைவராகவும் இருந்தவர்.[1] இவர் இந்திய மாநிலமான கோவாவில் பிறந்தார். போர்த்துகீசிய இந்தியாவில் சட்டத்தைப் படித்தார். இவர் கோவாவின் விடுதலைக்கானப் போராட்டத்தில் தீவிரமாக பங்குபெற்றார், பல ஆண்டுகள் ஆப்பிரிக்காவிற்கும் போர்ச்சுகல்லுக்கும் நாடு கடத்தப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராகவும், மஹாராஷ்ட்ரவதி கோமண்டக் கட்சியில் ஒரு முக்கிய நபராகவும் இருந்தார்.[2] சிரோட்கர் மராத்தி, கொங்கனி, ஆங்கிலம், போர்த்துகீசிய மொழிகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். பால கங்காதர் திலக்கின் ஸ்ரீமத்பக்பத்வதீதர்ஹசியாவை போர்த்துகீசிய மொழிக்கு மொழிபெயர்த்தார்.

பாண்டுரங் புருசோத்தம் சிரோட்கர்
கோவாவின் சட்டமன்ற அவைத்தலைவர்
பதவியில்
1964–1967
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்கோபால் அப்பா காமத்
கோவாவின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1964–1967
முன்னையவர்தொகுதி உருவாக்கப்பட்டது
பின்னவர்புனாஜி அச்ரேக்கர்
தொகுதிசியோலிம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1916-12-12)12 திசம்பர் 1916
கோவா, போர்த்துகேய இந்தியா
இறப்பு5 செப்டம்பர் 2000(2000-09-05) (அகவை 83)
தேசியம் இந்தியாn
அரசியல் கட்சிமகாராட்டிரவாதி கோமந்த கட்சி
பிள்ளைகள்பிரகாஷ் சந்திர பாண்டுரங் சிரோட்கர் (மகன்)

குறிப்புகள்

தொகு
  1. "Past speakers of Goa". Archived from the original on 24 September 2009.
  2. cabinet government in Goa, 1961–1993, Pages:4–5 By Aureliano Fernandes

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு