சிற்பநூல்களில் சொல்லப்பட்டுள்ள விதிகளுக்கு அமைய அமைக்கப்படுகின்ற இந்திய மரபுவழிக் கட்டிடங்களில் தாங்குதளத்துக்கு மேல் அமையும் உறுப்பு பாதசுவர் ஆகும். இதன் மேற்பகுதி, பிரஸ்தரம் எனச் சிற்ப சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்ற தளத்தின் கீழ் அமைகின்றது. இப்பகுதி கட்டிடத்தின் தன்மைக்கேற்ப சுவர்களாகவோ, தூண்களாகவோ அல்லது இரண்டும் சேர்ந்தோ அமைந்திருக்கக் காணலாம்.

இந்திய மரபுவழிக் கட்டிடங்களின் உறுப்புக்கள். தாங்குதளம், பிரஸ்தரம் ஆகியவற்றுக்கு இடையில் அமைவதே பாதசுவர் ஆகும்.

பெயர்கள் தொகு

இவ்வுறுப்பு, பாதசுவர், கால், பாதம், ஸ்தம்பம், பித்தி எனப் பல பெயர்களால் அழைக்கப்படுவதுண்டு.

அமைப்பும், துணையுறுப்புக்களும் தொகு

பாதசுவர், சுவராக அமையும் போதும் வெறுமையான மேற்பரப்பாக அமைவதில்லை. இது, அரைத்தூண்கள், கோட்டங்கள், பஞ்சரங்கள், தோரணங்கள் எனப் பல்வேறு துணை உறுப்புக்களைக் கொண்டு அழகூட்டப்படுகின்றது. பிற்காலக் கட்டிடங்களில் பாதசுவரில் அமையும் அரைத்தூண்கள் முதலியவை நேரடியாகத் தாங்குதளத்திலிருந்து ஆரம்பிக்காமல், தாங்குதளத்தின்மேல், பாதசுவரின் ஒரு பகுதியாக அமையும் வேதிகை எனப்படும் பகுதிக்கு மேல் அமைந்திருப்பதைக் காணலாம்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதசுவர்&oldid=2489445" இலிருந்து மீள்விக்கப்பட்டது