பாதரசம்(II) சிடீயரேட்டு
பாதரசம்(II) சிடீயரேட்டு (Mercury(II) stearate) C36H70HgO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என பாதரசம்(II) சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[2] உள்ளிழுத்தல், உட்செலுத்துதல் மற்றும் தோல் உறிஞ்சுதல் ஆகியன நேரிட்டால் இச்சேர்மம் மிகவும் நச்சுத்தன்மையுடையது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மெர்க்குரிக் சிடீயரேட்டு, மெர்க்குரிக் டைசிடீயரேட்டு, பாதரச டையாக்டாடெக்கானேட்டு
| |
இனங்காட்டிகள் | |
645-99-8 | |
ChemSpider | 62735 |
EC number | 211-458-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 69531 |
| |
UNII | AZ2X2WK6RN |
பண்புகள் | |
C 36H 70HgO 4 | |
வாய்ப்பாட்டு எடை | 767.529 |
தோற்றம் | மஞ்சள் நிற மெழுகு |
உருகுநிலை | 112.2 °C (234.0 °F; 385.3 K) |
கொதிநிலை | 359.4 °C (678.9 °F; 632.5 K) |
கரையாது | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 162.4 °C (324.3 °F; 435.5 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபாதரசம்(II) குளோரைடுடன் சோடியம் சிடீயரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்யும்போது பரிமாற்ற வினையில் பாதரசம்(II) சிடீயரேட்டு உருவாகிறது.
மெர்குரியசு ஆக்சைடை சிடீயரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தினாலும் பாதரசம்(II) சிடீயரேட்டு கிடைக்கும்.[3]
இயற்பியல் பண்புகள்
தொகுமஞ்சள் நிற மெழுகுப் பொருளாக பாதரசம்(II) சிடீயரேட்டு உருவாகிறது.[4]
கொழுப்பு எண்ணெய்களில் கரையும். நீர் அல்லது ஆல்ககாலில் கரையாது.[5]
பயன்கள்
தொகுபாதரசம்(II) சிடீயரேட்டு கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது.[5] பீங்கான் உற்பத்தியில் ஒரு நெகிழியாக்கியாகப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "CAS 645-99-8 Mercury stearate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 15 February 2023.
- ↑ Lewis, Robert A. (1 April 2016). Hawley's Condensed Chemical Dictionary (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 878. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-26784-3. பார்க்கப்பட்ட நாள் 15 February 2023.
- ↑ Works of the Cavendish Society: Gmelin, Leopold. Hand-book of chemistry. 18 v. & index. 1848-72 (in ஆங்கிலம்). 1866. p. 112. பார்க்கப்பட்ட நாள் 15 February 2023.
- ↑ Morris, Christopher G.; Press, Academic; Morris, Christopher W. (27 August 1992). Academic Press Dictionary of Science and Technology (in ஆங்கிலம்). Gulf Professional Publishing. p. 1350. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-200400-1. பார்க்கப்பட்ட நாள் 15 February 2023.
- ↑ 5.0 5.1 "MERCURY STEARATE 645-99-8 wiki" (in ஆங்கிலம்). GuideChem. பார்க்கப்பட்ட நாள் 15 February 2023.