பாத பூஜை
பாத பூஜை என்பது இந்து சமயத்தின் பூஜைகளில் ஒன்றாகும் . பதாம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு திருவடி (கால்கள்) என்று பொருள். குரு, பெற்றோர், ஆன்மிகப் பெரியவர்களை கௌரவிக்க, அவர்களது கால்களை நீர் மற்றும் பாலைக் கொண்டு தூய்மை செய்த பின் சந்தானம் போன்ற வாசனை திரவியங்களைத் தடவி , மலர்கள் வைத்து கால்களில் விழுந்து வணங்கி வழிபடுவது இந்து சமயச் சடங்காகும்.
குருவுக்கு பாத பூஜை செய்வதன் மூலம், பக்தர்கள் தங்கள் நன்றியையும், மரியாதையையும் தெரிவிக்கின்றனர். மேலும் திருமணத்தின் போது, மணமகன், மணமகளுக்கு தாலி கட்டுவதற்கு முன்னர், தங்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து, ஆசீர்வாதம் பெறுவது முக்கிய திருமணச் சடங்காகும்.
சர்ச்சைகள்
தொகுசில தனியார் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் நாளின் போது, கல்வி அறிவு வழங்கும் ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் பாதபூஜை செய்கின்றனர். இச்செயல் கண்டிக்கத்தக்க்து என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அமைச்சரின் கருத்தை முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டித்துள்ளார்.[1]