பானிகால் கணவாய்

பானிகால் கணவாய் (Banihal Pass தேவநாகரி: बनिहाल दर्रा) பிர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது 2,832 மீட்டர் (9,291 அடி உயரம்) உயரத்தில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் காசுமீர் மாநிலத்திற்கும் காசுமீர் பள்ளத்தாக்கிற்கும் இடையே அமைந்துள்ளது.காசுமீரி மொழியில் பானிகால் என்பதற்கு பனிப்புயல் என்று பொருளாகும் [1].

பானிகால் கணவாய்
பானிகால் கணவாய் is located in ஜம்மு காஷ்மீர்
பானிகால் கணவாய்
ஏற்றம்2,832 மீ (9,291 அடி)
அமைவிடம் இந்தியா
மலைத் தொடர்பிர் பாஞ்சல், இமயமலை

குளிர்காலங்களில் இம்மலைத்தொடரானது பனிமூடி இருக்கும். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு பானிகால் கணவாய் வழியாகச் செல்லும் சாலை 1958 வரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் ஜவகர் குகை வடிவமைக்கப்பட்டதும் இப்பாதையானது உபயோகத்தில் இல்லை.

மேற்கோள்கள்தொகு

  1. Encyclopædia Britannica Online. "Banihāl Pass". 4 June 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-06-17 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானிகால்_கணவாய்&oldid=3587552" இருந்து மீள்விக்கப்பட்டது