பான் சிங் தோமர் (1932 - அக்டோபர் 1, 1981) ஓர் இந்திய இராணுவ வீரர், விளையாட்டு வீரர் மற்றும் ஒரு போராளி ஆவார். இவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தபோது ஓடுவதில் இவருக்கிருந்த திறமை அறியப்பட்டது. 1950 - 1960 களுக்கு இடைப்பட்ட காலத்தில் steeplechase பந்தயத்தில் 7 முறை தேசிய வாகையாளரான இவர் 1958 -ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டுள்ளார். தனது பணிக்கால முடிவிற்கு முன்னரே இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று தனது கிராமத்திற்கு திரும்பினார். தன் கிராமத்தில் குடும்பப் பகையால் உண்டான நிலத்தகராறினால் கொள்ளைக்காரனாகி சம்பல் பள்ளத்தாக்கு குழுக் கொள்ளையனாக தீய வழியில் பரவலாக அறியப்பட்டார். 1981-ம் ஆண்டு இந்திய சட்ட நடைமுறைபடுத்தும்(Indian law enforcement) அதிகாரிகளால் கொல்லப்பட்டார்.
பான் சிங் தோமர் |
தனித் தகவல்கள் |
---|
தேசியம் | இந்தியா |
---|
பிறந்த இடம் | பிந்த்(Bhind), மத்தியப் பிரதேசம் |
---|
இறந்த நாள் | 1 அக்டோபர் 1981 (அகவை 48–49) |
---|
இறந்த இடம் | ரதிபுரா, மத்தியப் பிரதேசம் |
---|
உயரம் | 6 அடி 1 அங் (1.85 m) [1] |
---|
விளையாட்டு |
---|
விளையாட்டு | தடகளம் |
---|
நிகழ்வு(கள்) | 3000 மீட்டர்கள் தடை தாண்டி ஓட்டம் |
---|
|