பாபா கணவாய்

பாபா கணவாய் (Bhaba Pass) அல்லது பாவா கணவாய் எனவும் அழைக்கப்படும் ஒரு கணவாயானது 4890 மீட்டர் (16043 அடி) உயரத்தில், வட இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ளது . [1] இது கின்னெளர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கின்னெளர் பகுதியில் உள்ள பசுமையும் வளமும் நிறைந்த பாபா பள்ளத்தாக்கை ஸ்பிதி பக்கத்தில் ஊசிப் பள்ளத்தாக்குடன் இணைக்கிறது.

கண்ணோட்டம்

தொகு

தேசிய நெடுஞ்சாலை 22 ஆனது சட்லெஜ் ஆற்றிற்கு இணையாக கட்காவ்ன் மற்றும் காப்னு ஆகியவற்றிற்கு இட்டுச் செல்லும் ஒரு குறுகிய சாலை வழியைக் கொடுக்கிறது. கட்காவ்ன் மற்றும் காஃப்னு ஆகியவை இமாச்சலத்தின் மிக அழகான மலையேற்றப் பாதைகளில் ஒன்றான பாபா மலையேற்றத்திற்கான தளமாகும். ஸ்பிதியில் உள்ள ஊசிப் பள்ளத்தாக்குக்குள் நுழைவதற்கு 4890 மீட்டர் உயரத்தில் பனிப்பாறைகள் பொதிந்த நீரோடையான பாபா நதியைத் தாண்டி பாபா கணவாயை நோக்கி மிதமான ஏறுதல் ஒரு சவாலான சாகசமாகும். பாபா கணவாயிலிருந்து மேற்கில் மற்றொரு மலையேற்றம் குலுவின் பார்வதி பள்ளத்தாக்கினுக்குள் செல்கிறது.

தூரம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Himachal Tourism"". Himachal Tourism. Accessed 5 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபா_கணவாய்&oldid=3092100" இலிருந்து மீள்விக்கப்பட்டது