பாம்பாட்டி சித்தர்

தமிழ்நாட்டின் சித்தர்களில் ஒருவர்

பாம்பாட்டி சித்தர் (Pambatti Siddhar) என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர்.[1][2][3]

பாம்பாட்டிச்சித்தர்
பாம்பாட்டி சித்தர்
பிறப்புவசித்தது மருதமலை, கோயம்புத்தூர்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சித்தாரூடம்
மொழிதமிழ்
முக்கிய ஆர்வங்கள்
குண்டலினி யோகம்,
பாம்புகளைக் கையாளுவது

வாழ்க்கை குறிப்பு

தொகு

மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் ‘சித்தாரூடம்’ எனும் நூலையும் எழுதியவர்.

அற்புதங்கள்

தொகு

பாம்பாட்டி சித்தர் பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார்.வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார்.எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, மனதுக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.
இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!
என்று . உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.

குண்டலினி யோகம்

தொகு

உடல் பற்றி சொன்னாலும் சரி, உள்ளம் பற்றி சொன்னாலும் சரி... அதை குண்டலினியில் முடித்தார். அதை எழுப்பி ஆட்டி வைப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார்.

பாம்பாட்டி சித்தர் மடம் அமைவிடம்

தொகு

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Powers of siddhars" (in en-IN). The Hindu. 2019-01-02. https://www.thehindu.com/society/faith/powers-of-siddhars/article25891436.ece. 
  2. "Pambatti siddhar". siddhars.com. பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
  3. Siddhars

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பாட்டி_சித்தர்&oldid=4100675" இலிருந்து மீள்விக்கப்பட்டது