பாம்புத்தாரா
பாம்புத்தாரா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பேரினம்: | Anhinga
|
இனம்: | melanogaster
|
Distribution map | |
வேறு பெயர்கள் | |
Plotus melanogaster |
பாம்புத்தாரா ( Oriental darter, Anhinga melanogaster) என்பது தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் நீர்ப்பறவையாகும். இவற்றை வழுவாங்கி என்றும் நெய்காக்கை என்றும் அழைப்பதுண்டு. இவை நீண்ட மற்றும் மெல்லிய கழுத்தும் நேர்க்கூரான அலகும் கொண்டுள்ளன. இவை நீர்க்காகம் போன்று நீரில் மூழ்கி மீன்களை வேட்டையாடுகின்றன. இவை நீருக்கடியில் ஒரு மீனைப் பிடித்த பிறகு, மேற்பரப்பிற்கு மேலே கொண்டு வந்து, காற்றில் வீசியெறிந்து விழுங்குகின்றன. நீருக்குள் தன் உடலை வைத்துக்கொண்டு, நீருக்கு வெளியே கழுத்தை மட்டும், பாம்பு போல நீட்டிக் கொண்டு, நீந்துவதால் இவை பாம்புத்தாரா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. நீர்க்காகங்களைப் போலவே, இவை ஈரமான இறகுகளைக் கொண்டுள்ளது, பெரும்பாலும் ஒரு பாறை அல்லது கிளையில் அமர்ந்து இறக்கைகளை விரித்து உலரச்செய்யும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Anhinga melanogaster". IUCN Red List of Threatened Species 2016: e.T22696712A93582012. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22696712A93582012.en. https://www.iucnredlist.org/species/22696712/93582012. பார்த்த நாள்: 11 November 2021.