பாம்ப்ளியா

தற்போதைய துருக்கியில் உள்ள தெற்கு அனதோலியாவில் உள்ள பண்டைய பிராந்தியம்

பாம்ப்ளியா (Pamphylia, பண்டைக் கிரேக்கம்Παμφυλία , பம்ஃபிலியா, நவீன உச்சரிப்பு Pamfylía / pæm ˈfɪl iə / ) என்பது சின்ன ஆசியாவின் தெற்கில், லைசியாவிற்கும் சிலிசியாவிற்கும் இடையில், மத்தியதரைக் கடலில் இருந்து தாரசு மலை வரை நீண்டுள்ளது (இவை அனைத்தும் நவீன கால துருக்கியின், அந்தால்யா மாகாணத்தில் உள்ளது). இது வடக்கில் பிசிடியாவை எல்லையாக கொண்தாக இருந்தது. எனவே இது சிறிய அளவிலான ஒரு நாடாக இருந்தது. சுமார் 50 கிமீ (30 மைல்) அகலம் கொண்ட சுமார் 120 கிமீ (75 மைல்) கடற்கரையை மட்டுமே கொண்டிருந்தது. உரோமானிய நிர்வாகத்தின் கீழ் பம்பிளியா என்ற சொல் பிசிடியா மற்றும் ஃபிரிஜியா மற்றும் லைகோனியாவின் எல்லைகள் வரை முழுவதுமாக உள்ளடக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டது. மேலும் இந்த பரந்த பொருளில் இது தொலெமியால் பயன்படுத்தப்பட்டது.[1]

Pamphylia (Παμφυλία)
அனத்தோலியாவின் பண்டைய பிராந்தியம்
பாம்பிளியாவின் தலைநகரான பெர்காவின் பிரதான வீதியின் இடிபாடுகள்
Locationதெற்கு அனத்தோலியா
State existed:-
தேசம்பாம்பிலியர்கள், பிசிடியன்கள், கிரேக்கர்கள்
வரலாற்றுக்கால தலைநகரம்Perga, அட்டலிக்கா
உரோமானிய மாகாணம்Pamphylia
கிரேக்க-உரோமானிய காலத்தில் அனத்தோலியா/சின்ன ஆசியா. பாம்பிலியா உட்பட பாரம்பரிய பகுதிகள் மற்றும் அவற்றின் முக்கிய குடியிருப்புகள்.

குறிப்புகள்

தொகு
  1.   ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Pamphylia". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 20. (1911). Cambridge University Press. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்ப்ளியா&oldid=3399655" இலிருந்து மீள்விக்கப்பட்டது