லைசியா

அனத்தோலியாவின் புவியியல் பகுதி

லைசியா (Lycia, லைசியன் : 𐊗𐊕𐊐𐊎𐊆𐊖 Trm̃mis ; கிரேக்கம்: Λυκία‎ , Lykia ; துருக்கியம்: Likya ) என்பது அனத்தோலியாவில் உள்ள ஒரு புவிசார் அரசியல் பகுதி ஆகும். இது தற்போதய துருக்கியின் தெற்கு கடற்கரையில் உள்ள அந்தால்யா மற்றும் முலா மாகாணங்கள், மத்தியதரைக் கடலின் எல்லையிலும், உள்நாட்டில் பர்துர் மாகாணத்தையும் கொண்டதாக உள்ளது. பண்டைய எகிப்து மற்றும் வெண்கலக் காலத்தின் பிற்பகுதியில் இட்டைட்டு பேரரசின் பதிவுகளிலிருந்து வரலாற்றில் அறியப்பட்ட இது, லூவிய மொழிக் குழு பேசும் மக்களைக் கொண்டதாக இருந்தது. இரும்புக் காலத்தில் அகாமனிசியப் பேரரசில் லைசியா தன்னிச்சையாக இணைந்த பிறகு, எழுதப்பட்ட பதிவுகள் லைசியன் மொழியில் (லூவியனின் பிற்கால வடிவம்) கல்லில் பொறிக்கத் தொடங்கின. அக்காலத்தில் (546 கி.மு) லூவியன் மொழி பேசுபவர்கள் அழிக்கப்பட்டனர், மேலும் லிசியாவுக்கு பாரசீக மொழி பேசுபவர்களின் வருகைதந்தனர். இப்பகுதியின் பழைய பெயர் அலோப் ( பண்டைக் கிரேக்கம்Ἀλόπη ) என்று பண்டைய ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. , Alópē )[1]

லைசியா
Lukka
𐊗𐊕𐊐𐊎𐊆𐊖 (Trm̃mis)
Λυκία (Lykia)
அனத்தோலியாவின் பண்டைய பிராந்தியம்
Lycian rock cut tombs of Dalyan
லைசியன் குடைவரை டாலியானின் கல்லறைகள்
LocationTeke Peninsula, Western Taurus Range, தெற்கு அனத்தோலியா
State existed15–14th centuries BC (as Lukka)
1250–546 BC
அடுத்தடுத்து வந்த மொழிகள்லூவியன், Lycian, கிரேக்க மொழி
அடுத்தடுத்த தலைநகரங்கள்Xanthos, Patara
அகாமனிசியப் பேரரசு satrapyCilicia & Lydia
Roman protectorateLycian League
Roman provinceLycia, then Lycia with other states
Byzantine eparchyLykia
Location of Lycia. சின்ன ஆசியா/அனத்தோலியாவில் கிரேக்க-உரோமன் காலத்தில் லைசியாவின் அமைவிடம். லைசியா உட்பட பாரம்பரிய பகுதிகள் மற்றும் அவற்றின் முக்கிய குடியிருப்புகள்

Map of Classical Lycia
லிசியாவின் வரைபடத்தில் குறிப்பிடத்தக்க பண்டைய நகரங்கள் மற்றும் சில பெரிய மலைகள் மற்றும் ஆறுகளைக் காட்டுகிறது. சிவப்பு புள்ளிகள் மலை சிகரங்கள், வெள்ளை புள்ளிகள் பண்டைய நகரங்கள்.

லிசியா பாரசீகப் போர்களில் பாரசீகர் அணியில் இருந்து போராடியது. ஆனால் கிரேக்கர்களால் அகாமனிசியப் பேரரசு தோற்கடிக்கப்பட்டது. அதன்பிறகு ஏதெனியன் பேரரசில் சிலகாலம் உறுப்பினராக இருந்தது. பிறகு, இது பிரிந்து சுதந்திரமாக மாறியது. அதன்பிறகு மீண்டும் பாரசீகர்களின் கீழ் இருந்தது. பின்னர் காரியாவின் மவுசோலசால் கைப்பற்றப்பட்டு, மீண்டும் பாரசீகர்களின் கைகளுக்கே வந்தது. இறுதியாக பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகர்களைய தோற்கடித்தப் பிறகு மாசிடோனிய மேலாதிக்கத்தின் கீழ் வந்தது. கிரேக்க மொழி பேசுபவர்களின் வருகை மற்றும் மீதமுள்ள லைசியன் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக, லிசியா மாசிடோனியர்களின் கீழ் விரைவாக கிரேக்க மயமாக்கப்பட்டது. அதன்பிறகு லைசியன் மொழி கல்வெட்டுகள் மற்றும் நாணயங்களில் இருந்து மறைந்தது.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லைசியா&oldid=3399657" இலிருந்து மீள்விக்கப்பட்டது