பாயல் கபாடியா

இந்திய திரைப்பட படைப்பாளி

பாயல் கபாடியா (Payal Kapadia,பிறப்பு 1986) என்பவர் ஒரு இந்திய திரைப்படப் படைப்பாளியாவார். இவர் 2021 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப் படத்துக்கான கோல்டன் ஐ விருதை எ நைட் ஆஃப் நோனிங் நத்திங் படத்திற்காக பெற்றார்.[1][2][3][4] 2017 ஆம் ஆண்டில், இவரது திரைப்படமான ஆஃப்டர்நூன் கிளவுட்ஸ் 70வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படமாகும்.[5] 2024 ஆம் ஆண்டில், 2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படத்திற்காக இவர் கிராண்ட் பிரி விருதைப் பெற்றார்.[6]

பாயல் கபாடியா
2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் பாயல் கபாடியா
பிறப்பு1986 (அகவை 37–38)
மும்பை, இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்பூனே திரைப்படக் கல்லூரி
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போது

வாழ்க்கை

தொகு

ஓவியரும், காணொளி கலைஞருமான நளினி மலானிக்கு 1986 ஆம் ஆண்டு மும்பையில் கபாடியா பிறந்தார்.[7] கபாடியா ஆந்திராவில் உள்ள ஒரு உறைவிடப் பள்ளியான இரிஷி பள்ளத்தாக்கு பள்ளியில் பயின்றார். பள்ளியின் திரைப்படச் சங்கத்தின் உறுப்பினராக இருந்ததால், ரித்விக் கட்டக் மற்றும் ஆண்ட்ரி தர்கோவ்ஸ்கி போன்ற அவாண்ட்-கார்ட் திரைப்படப் படைப்பாளிகள் குறித்து அறிந்தார். மும்பை புனித சேவியர் கல்லூரியில் பயின்றார். சோபியா மகளிர் கல்லூரியில் ஓராண்டு முதுகலைப் பட்டம் பெற்றார்.[8] பின்னர் இவர் புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் பயின்றார்.[9] அங்கு இவர் 2012 இல் தனது இரண்டாவது முயற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இடையில் ஐந்து வருடங்கள் இவர் மும்பையில் விளம்பரம் மற்றும் வீடியோ கலை உதவியாளராக பணிபுரிந்தார்.[8] திரைப்படக் கல்லூரியை காவிமயமாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக 2015 ஆம் ஆண்டில், புனே திரைப்படக் கல்லூரியின் தலைவராக கஜேந்திர சவுகானை நியமித்ததற்கு எதிரான போராட்டங்களுக்குத் இவர் தலைமை தாங்கினார். மேலும் நிர்வாகம் இவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.[10] கல்வி நிறுவனம் இவருக்கான மானியங்களை தடைசெய்தது, இவருக்கான உதவித்தொகையும் மறுக்கப்பட்டது.[11][12]

திரைப்படவியல்

தொகு
- ஆவணப் படத்தைக் குறிக்கிறது
ஆண்டு படம் பணிகள் குறிப்புகள்
இயக்குநர் எழுத்தாளர் மற்றவை
2014 வாட்டமிலான், பிஷ் அண்ட் ஆஃப் கோஸ்ட்[13] ஆம் இல்லை இல்லை குறும்படம்
2015 ஆஃடர்நூன் கிளவுட்ஸ் ஆம் ஆம் இல்லை
2017 த லாஸ்ட் மேங்கோ பிஃபோர் த மான்சூன் ஆம் ஆம் படத்தொகுப்பாளர்
2018 அண்டு வாட்டீஸ் த சம்மர் சேயிங் ஆம் ஆம் இல்லை
2021 எ நைட் ஆப் நோயிங் நத்திங் ஆம் ஆம் இல்லை
2024 ஆல் வி இமேஜின் ஆஸ் லைட் ஆம் ஆம் இல்லை

மேற்கோள்கள்

தொகு
  1. "Payal Kapadia wins best documentary award in Cannes". India Today (in ஆங்கிலம்). 18 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  2. "Mumbai-based film-maker Payal Kapadia wins Best Documentary Award at Cannes". 19 July 2021. https://economictimes.indiatimes.com/magazines/panache/mumbai-based-film-maker-payal-kapadia-wins-best-documentary-award-at-cannes/articleshow/84549199.cms. 
  3. "Cannes 2021: India's Payal Kapadia wins best documentary award". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-07-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  4. Entertainment, Quint (2021-07-18). "Cannes 2021: Payal Kapadia's A Night of Knowing Nothing Wins Best Documentary". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  5. "Meet FTII student Payal Kapadia, whose film Afternoon Clouds, was selected for Cannes 2017". Firstpost. 2017-06-10. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  6. "Indian filmmaker Payal Kapadia makes history with Cannes Grand Prix win for 'All We Imagine as Light'". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 May 2024.
  7. "AN INTERVIEW WITH PAYAL KAPADIA ABOUT „AND WHAT IS THE SUMMER SAYING"". Berlinale. 12 February 2018. பார்க்கப்பட்ட நாள் 26 May 2024.
  8. 8.0 8.1 Dore, Bhavya (7 June 2017). "Payal Kapadia: Over the Clouds". Open: The Magazine.
  9. "Who Is Payal Kapadia? The Director Wins Best Documentary Award In Cannes" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  10. "কানে ভারতের মুখ উজ্জ্বল করলেন যে পায়েল, তাঁরই অনুদান বন্ধ করে দিয়েছিলেন এফটিআই কর্তৃপক্ষ!". பார்க்கப்பட்ட நாள் 28 May 2024.
  11. "Tracing Payal Kapadia's journey, from protesting against Gajendra Chauhan at FTII to winning Grand Prix at Cannes". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-05-26. பார்க்கப்பட்ட நாள் 2024-05-28.
  12. "Payal Kapadia, 'All We Imagine…' director, once faced disciplinary action at FTII". India Today (in ஆங்கிலம்). 2024-05-26. பார்க்கப்பட்ட நாள் 2024-05-28.
  13. "Watermelon, Fish and Half Ghost (Student Film) – Urban Lens" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2021-07-20. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயல்_கபாடியா&oldid=4107931" இலிருந்து மீள்விக்கப்பட்டது