இரிஷி பள்ளத்தாக்கு பள்ளி

இரிஷி பள்ளத்தாக்கு பள்ளி (Rishi Valley School) என்பது ஒரு இந்திய உறைவிடப் பள்ளியாகும். இது தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியால் நிறுவப்பட்டது. அவரது கல்வியியல் பார்வையின் உணர்வில் பள்ளிக்கு கல்விக்கான முழுமையான அணுகுமுறையாக இது உள்ளது. கலந்துரையாடல்கள், கூட்டங்கள் மற்றும் சங்கக் கூட்டங்கள் போன்ற சமூக சேவை மற்றும் பாடநெறி நடவடிக்கைகள் மாணவர்களின் பள்ளிப்படிப்பின் ஒரு பகுதியாகும்.

இரிஷி பள்ளத்தாக்கு பள்ளி
பக்கத்து மலையிலிருந்து வளாகத்தின் தோற்றம்
அமைவிடம்
மதனப்பள்ளி, ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
தகவல்
வகைதனியார் உறைவிடப் பள்ளி
தொடக்கம்1926
நிறுவனர்ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
பள்ளி மாவட்டம்சித்தூர் மாவட்டம்
இயக்குனர்முனைவர் மீனாட்சி தப்பன்
அதிபர்முனைவர் ஆனந்த ஜோதி
பீடம்59
தரங்கள்4–12
பால்இணை கல்வி
வயது வீச்சு8-17
மொத்த சேர்க்கை365
இல்லங்கள்20
இணைப்புஇந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் (ஐசிஎஸ்இ)
ஐஎஸ்சி
இணையம்

இந்தப் பள்ளி ஒரு சுயாதீன பள்ளத்தாக்கின் 375 ஏக்கரில் அமைந்துள்ளது. இது பழைமையான மலைகளாலும், சிறிய கிராமங்களாலும் சூழப்பட்டுள்ளது. இது தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் அவரது பிறப்பிடமான மதனப்பள்ளி நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இதனை திருப்பதியிலிருந்து இரண்டு மணிநேரத்திலும், பெங்களூரிலிருந்து இரண்டரை மணி நேரத்திலும், சென்னையிலிருந்து ஐந்து மணி நேரத்திலும் அடையலாம்.

வரலாறு தொகு

தோற்றம் தொகு

இப்பள்ளியானது, 1925 ஆம் ஆண்டில் பிரம்மஞான சபையின் தலைவரான அன்னி பெசண்ட் அவர்களால் உலக பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்கான யோசனையுடன் பிறந்தது. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பிறந்த இடமான மதனப்பள்ளிக்கு அருகிலுள்ள மூன்று தளங்கள் பள்ளிக்கு சாத்தியமான இடங்களாக அடையாளம் காணப்பட்டன. தெட்டு பள்ளத்தாக்கிலுள்ள ஒரு தளத்தில் ஒரு பெரிய ஆலமரம் அவரது கவனத்தை ஈர்த்தது. அவர் அந்த மரத்தை சுற்றியுள்ள பகுதியில் பள்ளியைக் கட்டினார். [1]

1926 ஆம் ஆண்டில், அவரது சகா சி. எஸ். திரிலோகிகர் ஒரு மாட்டு வண்டியில் கிராமம் கிராமமாகச் சென்று, 300 ஏக்கர்வரை ஒரே இடத்திலுள்ள நிலங்கள் தேடப்பட்டு, 1929 வாக்கில் பெரும்பாலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. திரிலோகிகர் இதற்கு இரிஷி பள்ளத்தாக்கு என்று பெயரிட்டார். இது இரிஷிகள் பற்றிய புனைவுகளிலிருந்து பெறப்பட்ட பெயராகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலைகளில் வசிப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டன. [2]

இடமாற்றம் தொகு

அன்னி பெசண்ட் அவர்களால் 1918 இல் சென்னையில் "கிண்டி பள்ளி" என்ற ஒரு பள்ளி தொடங்கப்பட்டது. அதன் முதல் தலைமை ஆசிரியர், ஜி.வி. சுப்பா ராவ் (ஜி.வி.எஸ்) ஒரு இளம் பிரம்மமாவார். இங்கு இடம் குறைவாக இருந்தது. அண்மைப் பகுதி சத்தமாகவும், கூட்டமாகவும் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை பேரழிவை ஏற்படுத்தும், பள்ளியின் கூரைகளை அழித்து அதன் குடிசைகளை அழித்துவிடும். [3] 1930 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கிண்டி பள்ளியின் பெரும்பகுதியை அழித்த ஒரு மோசமான சூறாவளிக்குப் பிறகு, பள்ளி இரிஷி பள்ளத்தாக்குக்கு மாற்றப்பட்டது. [4]

குறிப்புகள் தொகு

  1. Dalal 2007.
  2. Dalal 2007, ப. 4.
  3. Dalal 2007, ப. 6.
  4. Balasundaram 2012, ப. 10.

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு