பாய் முடைதல் (தமிழர் தொழிற்கலை)

(பாய் பின்னுதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாய் முடைதல் அல்லது பாய் பின்னுதல் அல்லது பாய் நெய்தல் என்பது பனை ஓலை, ஈச்ச ஓலை, மூங்கில், நாணல் போன்ற பல்வேறு வகையான மூலப் பொருட்களைப் பயன்படுத்தி பாயைச் செய்தல் ஆகும். இது மரபார்ந்த கைத்தொழிலாகத் தமிழகத்திலும் ஈழத்திலும் நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. இந்த அரிய கலை இன்று மெதுவாக மறையத் தொடங்கி உள்ளது.