பாரடு (farad) (குறியீடு: F) என்பது அனைத்துலக முறை அலகுகளில் மின் கொண்மத்தின் அலகாகும். ஒரு பொருளால் தேக்கி வைக்கப்படும் மின்மத்தின் அளவு ஆகும். ஆங்கில இயற்பியலாளர் மைக்கேல் பரடே பெயரால் இந்த அலகு வழங்கப்பட்டுள்ளது.

பாரடு
ஒரு பாரடு கொண்மம் கொண்ட நவீன மின்தேக்கி இதன் நீளத்தை அளக்க செ.மீ அளவு கோல் வைக்கப்பட்டுள்ளது.
பொது தகவல்
அலகு முறைமைஅனைத்துலக முறை அலகுகள்
அலகு பயன்படும் இடம்கொண்மம்
குறியீடுF
பெயரிடப்பட்டதுமைக்கேல் பரடே
In SI base units:s4A2m−2kg−1

வரையறை

தொகு

ஒரு கூலும் மின்மத்தைக் கொண்ட மின்தேக்கியில் ஒரு வோல்ட் மின்னழுத்தம் உருவாக்கப்பட்டால், அதிலுள்ள கொண்மத்தின் அளவு ஒரு பாரடு ஆகும்.[1] அல்லது ஒரு பாரடு கொண்மம் என்பது ஒரு வோல்ட் மின்னழுத்தத்தால் ஒரு கூலும் மின்மத்தைத் தேக்கி வைக்கபடுவதாகும்.[2]

கொண்மத்திற்கும் மின்னழுத்தத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு நேர் விகிதத்தில் இருக்கும். எடுத்துக்காட்டாக, மின் தேக்கியின் மின்னழுத்ததைப் பாதியாக்கினால், கொண்மமும் பாதியாகிறது.

பெரும்பாலான பயன்பாடுகளில் கொண்மத்தின் அலகு பெரிதாக இருப்பதால், மின்னியல் மற்றும் மின்னணுவியல் சார்ந்த கருவிகளில் கீழ்க்கண்ட பயன்பாடுகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன:

1 mF (மில்லிபாரடு, ஆயிரத்தில் ஒரு பகுதி (10−3 பாரடு) = 1000 μF = 1000000 nF

  • 1 μF (மைக்ரோபாரடு, பத்து இலட்சத்தில் ஒரு பகுதி (10−6 பாரடு) = 0.000 001 F = 1000 nF = 1000000 pF
  • 1 nF (நானோபாரடு, பில்லியனில் ஒரு பகுதி (10−9 பாரடு) = 0.001 μF = 1000 pF
  • 1 pF (பிக்கோபாரடு, லட்சம் கோடியில் ஒரு பகுதி (10−12 பாரடு)

சமமான மற்ற அலகுகள்

தொகு

பாரடு அலகு என்பது கீழ்க்கண்ட அனைத்துலக முறை அலகுகளில் வழங்கப்படுகிறது.

s4A2m−2kg−1

இது மேலும் கீழ்க்கண்ட அலகுகளாலும் வழங்கப்படுகிறது:

 

இதில்

F என்பது கொண்மத்தின் அலகு பாரடு

A என்பது மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்

C என்பது மின்மத்தின் அலகு கூலும்

J என்பது ஆற்றலின் அலகு சூல்

m என்பது தூரத்தின் அலகு மீட்டர்

N என்பது விசையின் அலகு நியூட்டன்

s என்பது காலத்தின் அலகு நொடி

W என்பது வலுவின் அலகு வாட்டு

kg என்பது நிறையின் அலகு கிலோகிராம்

Ω என்பது மின்தடையின் அலகு ஓம்

Hz என்பது அதிர்வெண்ணின் அலகு ஏர்ட்சு

H என்பது மின் தூண்டலின் அலகு என்றி

வரலாறு

தொகு

1861 ஆம் ஆண்டு லாடிமர் கிளார்க் மற்றும் சார்லசு பிரைட் ஆகியோர் இந்த அலகைத் தேர்ந்தெடுத்தனர்.[3] மைக்கேல் பரடேவை கெளரவப்படுத்தவே பயன்படுத்தப்பட்டது. 1873 ஆம் ஆண்டு வரை மின்மத்தின் அலகாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் அது கொண்மத்தின் அலகாக மாற்றப்பட்டது.[4]

1881 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற சர்வதேச மின் வினைஞர் மாநாட்டில் பாரடு என்பது மின்னியல் கொண்மத்தின் அலகாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[5][6]

விளக்கம்

தொகு
 
பல்வேறு வகையான மின்தேக்கிகளின் படம்

பொதுவாக மின் தேக்கி, இரு மின் கடத்தும் பொருட்களுக்கிடையே, மின் காப்புப் பொருளால் பிரிக்கப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட லேய்டின் கொள்கலன் என்பதே முதல் மின்தேக்கி. மின் கடத்தும் தகடுகளுக்கிடையே தேக்கப்படும் மின்மங்களே கொண்மத்திற்கு காரணமாகிறது. நவீன மின்தேக்கிகள் பல்வேறு பொருட்களையும் மற்றும் தொழிற்நுட்பங்களையும் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மின்னணுவியலில் பெம்டோபாரடு என்ற கொண்ம அளவு கொண்ட மின்தேக்கி எதிர்கொள்ளும் அதிகபட்ச மின்னழுத்தம் பல கிலோவோல்ட் ஆகும்.

கொண்மத்தின் அலகு பாரடு (F) என்றாலும் மில்லி பாரடு (mF), மைக்ரோ பாரடு (μF), நானோ பாரடு (nF), பிக்கோ பாரடு (pF) ஆகிய அலகுகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.[7]

முறைசாரா மற்றும் வழக்கொழிந்த சொல்லியல்

தொகு

பிக்கோபாரடு என்பது பேச்சு வழக்கில் பிக் அல்லது பப் என அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 10 பிக் மின்தேக்கி என்பது 10 பிக்கோபாரடு மின் தேக்கியைக் குறிக்கும்.[8] மைக் என்பது மைக்ரோ பாரடு மின் தேக்கியின் பேச்சு வழக்கு பெயராகும். மைக்ரோ மைக்ரோ பாரடு என்பது ஆரம்ப காலங்களில் பிக்கோ பாரடைக் குறிக்க புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டது. 1960 ஆம் ஆண்டுகளில் புத்தகங்களில் "எம்.எப்.டி" என்பது மைக்ரோ பாரடை குறிக்கவும், "எம்.எம்.எப்.டி" என்பது பிக்கோபாரடை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது.[9]

தொடர்புடைய கருத்துகள்

தொகு

மின் விலகல் என்பது கொண்மத்தின் தலைகீழியாகும். இவை அனைத்துலக முறை அலகுகளால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன் அலகு டாரப் என்பதாகும்.[10]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The International System of Units (SI) (PDF) (8th ed.). Bureau International des Poids et Mesures (International Committee for Weights and Measures). 2006. p. 144.
  2. Peter M B Walker, ed. (1995). Dictionary of Science and Technology. Larousse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0752300105.
  3. As names for units of various electrical quantities, Bright and Clark suggested "ohma" for voltage, "farad" for charge, "galvat" for current, and "volt" for resistance. See:
  4. Sir W. Thomson, etc. (1873) "First report of the Committee for the Selection and Nomenclature of Dynamical and Electrical Units," Report of the 43rd Meeting of the British Association for the Advancement of Science (Bradford, September 1873), pp. 222-225. From p. 223: "The "ohm," as represented by the original standard coil, is approximately 109 C.G.S. units of resistance ; the "volt" is approximately 108 C.G.S. units of electromotive force ; and the "farad" is approximately 1/109 of the C.G.S. unit of capacity."
  5. (Anon.) (September 24, 1881) "The Electrical Congress," The Electrician, 7 : 297. From p. 297: "7. The name farad will be given to the capacity defined by the condition that a coulomb in a farad gives a volt."
  6. Tunbridge, Paul (1992). Lord Kelvin : his influence on electrical measurements and units. London: Peregrinus. pp. 26, 39–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780863412370. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015.
  7. Braga, Newton C. (2002). Robotics, Mechatronics, and Artificial Intelligence. Newnes. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-7389-3. பார்க்கப்பட்ட நாள் 2008-09-17. Common measurement units are the microfarad (μF), representing 0.000,001 F; the nanofarad (nF), representing 0.000,000,001 F; and the picofarad (pF), representing 0.000,000,000,001 F.
  8. "Puff". Wolfram Research. பார்க்கப்பட்ட நாள் 2009-06-09.
  9. "1940 Catalog - Page 54 - Capacitors (Condensers)". RadioShack. Archived from the original on 11 July 2017. பார்க்கப்பட்ட நாள் 11 July 2017.
  10. "Daraf". Webster's Online Dictionary. Archived from the original on 2011-10-04. பார்க்கப்பட்ட நாள் 2009-06-19.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரடு&oldid=3587523" இலிருந்து மீள்விக்கப்பட்டது