பாரடைஸ் லாஸ்ட்

பாரடைஸ் லாஸ்ட்" (Paradise Lost) என்பது 17-ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேயக் கவிஞரான ஜான் மில்டன் (1608-1674) எழுதிய காவியம் ஆகும். 1667ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் பதிப்பு, பத்து ஆயிரம் வரிகள் கொண்ட பத்து புத்தகங்களைக் கொண்டிருந்தது. 1674 இல் வெளிவந்த இரண்டாவது பதிப்பானது, பன்னிரண்டு புத்தகங்களாக சிறிய திருத்தங்களைக் கொண்டதாகவும், விரிவுரையில் ஒரு குறிப்பும் இடம்பெற்றதாகவும் வெளிவந்தது.[1][2] இது மில்டனின் முக்கிய படைப்பு என்று விமர்சகர்களால் கருதப்படுகிறது, மேலும் அவரது காலத்தின் மிகப்பெரிய ஆங்கில கவிஞர்களில் ஒருவராக அவரது புகழை உறுதிப்படுத்த உதவியது.[3]

பாரடைஸ் லாஸ்ட்
Paradise Lost
1667 முதல் பதிப்பின் முகப்பு அட்டை
நூலாசிரியர்ஜான் மில்டன்
அட்டைப்பட ஓவியர்ஜே. பி. டி மெதினா, என்றி ஆல்டிரிச்
நாடுஇங்கிலாந்து
மொழிஆங்கிலம்
வகைஇதிகாசம், கிறித்தவ மரபு புனைவு
வெளியீட்டாளர்சாமுவேல் சிமன்சு
வெளியிடப்பட்ட நாள்
1667
ஊடக வகைஅச்சு
அடுத்த நூல்பாரடைசு ரீகெயின்ட்

இந்த கவிதை விவிலியத்தை தழுவி எழுதப்பட்டுள்ளது. முதல் புத்தகத்தில் கடவுளால் படைக்கப்பட்ட ஈடன் கார்டன் என்ற அழகான தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்ததையும் அத்தோட்டத்தில் சாத்தான் நுழைந்து இருவரையும் தனது பேச்சாற்றலால் தனது பக்கம் ஈர்த்து கடவுளுக்கு எதிராக செயல்பட வைப்பதையும் எழுதியுள்ளார் .

இழந்த சொர்க்கம் என்பது ஆதாம் ஏவாள் பற்றிய கதை. இருவரும் ஈடன் தோட்டத்தில் எப்படி படைக்க பட்டார்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்பதை கூறுகிறது. மேலும் சாத்தான் இக்கதையின் முக்கிய கதாபாத்திரமாக திகழ்கிறது. சாத்தான் ஒருமுறை கடவுளுக்கு எதிராக செயல்பட்டது அதனால் சொர்க்கத்தில் இருந்து நரகத்திற்கு அனுப்பப்பட்டது. சாத்தான் கடவுளை பழிவாங்க நினைத்தது. தனது உண்மையான உருவத்தில் இருவரையும் சந்திக்க இயலாமையால் பாம்பு உருவம் எடுத்து சந்திக்கிறது. கடவுள், ஆதாம் ஏவாள் அப்பழத்தை சாப்பிடக்கூடாது என்று கூறினார். ஆனால் சாத்தான் அப்பழத்தை சாப்பிடுமாறு தூண்டியது. அப்பழத்தை சாப்பிட்டவுடன் கடவுளின் வார்த்தையை மீறி விட்டோம் என குற்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படுகின்றது பிறகு சாத்தான் மகிழ்ச்சியாக நரகத்திற்கு திரும்புகின்றது. அப்போது மனித இனத்தின் சரிவு ஏற்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Milton, John (1674). Paradise Lost; A Poem in Twelve Books (II ). London: S. Simmons. https://archive.org/stream/ParadiseLost1674#page/n4/mode/1up. பார்த்த நாள்: 8 January 2017. 
  2. "Paradise Lost: Introduction". Dartmouth College. 24 மே 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 March 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "John Milton". Poetry Foundation. 19 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரடைஸ்_லாஸ்ட்&oldid=3726010" இருந்து மீள்விக்கப்பட்டது